இது அடுத்துவரும் 24 - 48 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கம் மேலும் விரிவடையும்.



வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழ்
 அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது.

இது அடுத்துவரும் 24 - 48 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்தது தாழ் அமுக்கமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் 24 ம் திகதியளவில் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையினூடாக மேற்கு-வடமேற்குத் திசையை நோக்கி நகரக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி,மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

இப் பிரதேசங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்

தாழ் அமுக்கப் பிரதேசமானது அடுத்துவரும் 24_48 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்தது தாழ் அமுக்கமாக மாற்றமடையும்.

இதன் தாக்கத்தின் காரணமாக சில தினங்களுக்கு கிழக்கு மற்றும் வடக்கு கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் பலத்த காற்றும் வீசக்கூடும். கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் வழங்கப்படுகன்ற அறிவுறுத்தல்களை கவனத்திற்கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ,மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50_60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும் .

தேசமானிய
மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.
இது அடுத்துவரும் 24 - 48 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கம் மேலும் விரிவடையும். இது அடுத்துவரும் 24 - 48 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கம் மேலும் விரிவடையும். Reviewed by Madawala News on November 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.