எமக்கு தேவையான உற்பத்திகளை நாமே உற்பத்தி செய்வது காலத்தின் தேவையாகும்.



 ஹஸ்பர் ஏ ஹலீம்_
எமக்கு தேவையான உற்பத்திகளை நாமே உற்பத்தி செய்வது காலத்தின் தேவையாகும் என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.



மொரவெவ பெரும்போக பயிர்ச்செய்கை தொடர்பான கூட்டம் வெள்ளிக் கிழமை (16) மொரவெவ பிரதேச செயலகத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் டபிள்யு.எம். பாத்திய விஜயந்த தலைமையில் நடைபெற்றபோதே  அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,கடந்த கொவிட் 19 வைரஸ் பரவலின்போது அவதானத்திற்கு மத்தியில் விவசாயிகளாகிய தாங்கள் சிறந்த முறையில் சிறுபோக பயிர்ச்செய்கையை மேற்கொண்டு சிறந்த அறுவடையைப் பெற்றீர்கள். அதேபோன்று இம்முறையும் சுகாதார நடைமுறைகளைப்பேணி பெரும்போக வேளாண்மைச் செய்கையை சிறப்பாக மேற்கொள்ளவேண்டும். தற்போது நாட்டில் கொவிட் 19 அவதான நிலை காணப்படுகின்றது. விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.குறிப்பாக இறக்குமதி நடைபெறவில்லை. எனவே நாட்டுக்கு அவசியமான உணவுற்பத்திகளை நாம் உற்பத்தி செய்து தன்னிறைவை அடைய முயற்சித்தல் வேண்டும் என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.



மொரவெவ வியாபார திட்டத்திற்கு நீர் கொண்டுவரப்படும் கால்வாய் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருவதாகவும்  விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தாம் இக்கூட்டத்திற்கு வருகை தந்துள்ளேன்.அதிமேதகு ஜனாதிபதியின் குறிக்கோளிற்கமைய விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பல செயற்றிட்டங்கள் எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அதற்கான முன்மொழிவுகளையும் மதிப்பீடுகளையும் வழங்குமாறு இதன்போது அரசாங்க அதிபர் உரிய அதிகாரிகளிடம் வேண்டிக்கொண்டார்.


நீர்ப்பாசனம், கால்நடைகளின் பிரவேசம், விவசாய காப்புறுதி , உர விநியோகம் மற்றும் விவசாயிகளது பிரச்சினைகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் எ.கே.எ.ஜப்பார் , திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


எமக்கு தேவையான உற்பத்திகளை நாமே உற்பத்தி செய்வது காலத்தின் தேவையாகும். எமக்கு தேவையான உற்பத்திகளை நாமே உற்பத்தி செய்வது காலத்தின் தேவையாகும். Reviewed by Madawala News on October 18, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.