பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது அதிக வேதனையளிக்கும் என தெரிக்கப்படும் கருத்துக்கள் பொய்யானவை.


 

பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது அதிக வேதனையளிக்கும் என தெரிக்கப்படும்

கருத்துக்கள் பொய்யானவை என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று (14) இரவு தெரண தொலைக்காட்சியின்  அளுத் பார்ளிமேன்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகில் பல மில்லியன் பேர் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது வேதனைக்குரிய விடயம் ஒன்று இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சரியாக அறிந்து கொள்ள தானும் பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிய அளவில் அசௌகரியம் ஏற்பட்டாலும் அது பயப்பட வேண்டிய விடயம் ஒன்று இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய கொரோனா கொத்தணியில் 1660 மேற்பட்ட தொற்றாளர்கள் இருந்த போதிலும் ஒருவர் கூட அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் அளவில் இல்லை எனவும் இதுவரையில் அவசர சிகிச்சை பிரில் யாருமே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது அதிக வேதனையளிக்கும் என தெரிக்கப்படும் கருத்துக்கள் பொய்யானவை. பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது அதிக வேதனையளிக்கும் என தெரிக்கப்படும் கருத்துக்கள் பொய்யானவை. Reviewed by Madawala News on October 15, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.