வாழைச்சேனையில் மீண்டும் 16 பேருக்கு கொரோணா (மொத்தம் 27 பேர்) - பாதுகாப்பு தீவிரம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி சுகாதார
 வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட பி.சீ.ஆர் பரிசோதனை மூலம் பதினாறு பேருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐம்பது நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது.

 

ஐம்பது நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் பதினாறு பேருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாத்திரம் 27 பேருக்கு கொரோணா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டு காணப்படுகின்றது.

 

இதனை தொரடந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையினை கடைப்பிடிப்பதை அவதானிக்க முடிகின்றது.

 

வீதிகளில் முக்கிய தேவை ஏதும் இல்லாமல் திரிவோருக்கு எதிராக இராணுவத்தினரும், பொலிஸாரும் தங்களின் கடமைகளை கடுமையான முறையில் கடைப்பிடித்து வருவதனையும்; அவதானிக்க முடிகின்றது.

 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சகல பிரதான வீதிகளும் வெறிச்சோடி காணப்படுவதுடன், அனைத்து வீதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் நடமாட்டங்களும், அவசர தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்கள் மாத்திரம் காணப்படுகின்றது.

 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அரச திணைக்களங்கள், அரச வங்கிகள், திறக்கப்பட்டு குறித்த பகுதியில் கடையாற்றும் உத்தியோகத்தர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்கி வருவதுடன், மக்கள் திணைக்களத்திற்கு வருகை இன்மையாக காணப்படுவதுடன், தனியார் வங்கிகள், திணைக்களங்கள் என்பன மூடிக் காணப்படுகின்றது.

 

ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் இம்முறை உயர் தர பரீட்சை எழுதுவதற்காக தனிமைப்படுத்தலில் இருந்த மாணவர் ஒருவர் பொலிஸாரின் பாதுகாப்புடன் பரீட்சை எழுதுவதற்கு வருகை தந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

அத்தோடு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இருந்து எவரும் வெளி இடங்களுக்கு செல்ல முடியாத வகையிலும், வெளி இடங்களில் இருந்து வருபவர்கள் உள்ளே வர முடியாத வகையில் இராணுவம் மற்றும் பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

(எஸ்.எம்.எம்.முர்ஷித் 
வாழைச்சேனையில் மீண்டும் 16 பேருக்கு கொரோணா (மொத்தம் 27 பேர்) - பாதுகாப்பு தீவிரம் வாழைச்சேனையில் மீண்டும் 16 பேருக்கு கொரோணா (மொத்தம் 27 பேர்) - பாதுகாப்பு தீவிரம் Reviewed by Madawala News on October 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.