வெளிநாட்டில் குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்காக உயிருடன் இருந்த தாய்க்கு மரணச் சான்றிதழ் தயாரிப்பு .


உயிருடன் இருக்கும் ஒருவருக்கும், ஏற்கனவே உயிரிழந்த ஒருவருக்கும் போரின்போது
உயிரிழந்ததாக போலி மரணச் சான்றிதழ் தயாரித்த கிராம சேவகர் உட்பட மூவருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியுள்ளது.

புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார். அவர் அங்கு தனக்கான குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்காக அவரது பெற்றோர் போர் காலத்தில் உயிரிழந்துள்ளதாக போலியான மரணச் சான்றிதழ் தயாரித்துள்ளார்.

இவ் யுவதியின் தந்தை 2014 ஆம் ஆண்டு நோய் காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது தாயார் தற்போதும் வழ்ந்து வருகின்றார். ஆனால் இவர்கள் இருவரும் போரில் உயிரிழந்துள்ளதாக இப் போலி மரணச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து இதனை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் கிராம சேவையாளர், மரண விசாரணை அதிகாரி, பிரான்சில் உள்ளவரின் சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து அவர்கள் மூவரையும் பிணையில் செல்ல அனுமதி வழங்கிய நீதிமன்றம் அடுத்த வழக்கு விசாரணையினை நவம்பர் 30ஆம் திகதிக்கு தவணையிட்டு உத்தரவிட்டார்.
வெளிநாட்டில் குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்காக உயிருடன் இருந்த தாய்க்கு மரணச் சான்றிதழ் தயாரிப்பு . வெளிநாட்டில் குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்காக உயிருடன் இருந்த தாய்க்கு மரணச் சான்றிதழ் தயாரிப்பு . Reviewed by Madawala News on September 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.