இன, மத பேதமின்றி சகல சமூகத்தவர்களுக்கும் சேவை வழங்கு வை.எம்.எம்.ஏ.யின் மற்றுமொரு மகத்தான சேவை.


மக்களின் கஷ்டம் மற்றும்  வறுமை  நிலையையும்  கருத்திற்கொண்டு,
வை.எம்.எம்.ஏ. பல வழிகளிலும் உதவி உபகாரங்களைப் புரிந்து வருகிறது.

இன, மத, மொழி பேதமின்றி சகல சமூகத்தவர்களுக்கும் அவர்களின் தேவையறிந்து உடனடி நிவாரணங்களை வழங்குவதிலும் எமது பேரவை கரிசனை  காட்டிக்கொண்டிருக்கிறது. கொவிட் - 19 (கொரோனா) தொற்று ஏற்பட்டு மக்கள் அவதியுற்று அல்லல்பட்டுக்கொண்டிருந்த கால கட்டத்தில்  கூட, எமது பேரவைக்குக் கிடைத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளின் ஊடாக அவர்களுக்கு பாரிய சேவைகளைச் செய்யக் கிடைத்தமையையும் இங்கு குறிப்பிட்டுக்காட்ட வேண்டும்.


   இன்றும் கூட வை.எம்.எம்.ஏ. பேரவை மிகச்சிறப்பான நன்மை தரும் கைங்கரியமொன்றில் இறங்கியுள்ளது. இலங்கையெங்கும் உள்ள விசேட தேவையுள்ளவர்களைத் தேடி, அவர்களுக்காக சக்கர நாற்காலிகளை இலவசமாக வழங்கும் அந்த நல்ல பணியை இறைவன் அருளால் இன்று ஆரம்பித்திருக்கின்றோம் என்ற நற்செய்தியையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.


 மேற்கண்டவாறு, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி கருத்துத் தெரிவித்தார்.


   அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.  பேரவையின் ஊடாக  நாடளாவிய ரீதியில் விசேட தேவையுடையோருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வை எம் எம் ஏ பேரவையின் நாடளாவிய ரீதியில் 1000 சக்கர நாற்காளிகள்.
இன மத பேதமின்றி மூவின விஷேட தேவையுள்ளவர்களுக்கு வை எம் எம் ஏ கிளைகளினுடாக. அனைத்து  மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன .

இன, மத, மொழி  பேதமின்றி மூவின விசேட தேவையுள்ளவர்களுக்கு, வை.எம்.எம்.ஏ.  கிளைகளின் ஊடாக,  அனைத்து  மாவட்டங்களையும்  உள்ளடக்கியவாறு இவைகள் வழங்கப்பட்டு வருகின்றன .
ஆயிரம் சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்   இச்செயற்திட்டத்தை, பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி,  தேசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான தவிசாளர் கே.என். டீன்  வழிகாட்டலில், கொழும்பிலுள்ள  தலைமையகத்திலிருந்து ஆரம்பித்து வைத்தார். இதன்போதே தேசியத் தலைவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், தேசிய பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாபிர் சவாத், தேசிய பொதுப்பொருளாளர் இஹ்சான் ஹமீத் உள்ளிட்ட  மாவட்டப் பணிப்பாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )
இன, மத பேதமின்றி சகல சமூகத்தவர்களுக்கும் சேவை வழங்கு வை.எம்.எம்.ஏ.யின் மற்றுமொரு மகத்தான சேவை. இன, மத பேதமின்றி சகல சமூகத்தவர்களுக்கும் சேவை வழங்கு வை.எம்.எம்.ஏ.யின் மற்றுமொரு மகத்தான சேவை. Reviewed by Madawala News on September 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.