ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் சட்டம்... அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியது.


சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல் தொழில்நுட்பம்
மற்றும் ஏனைய ஊடகங்கள் மூலமாக வெளியிடுதல் சமீப காலத்தில் வேகமாக அதிகரித்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் செயற்படுவதற்கு அமைவான ஒழுங்கு விதிகள், குற்றவியல் சட்டத்தில் மற்றும் ஆபாச வெளியீடு கட்டளைச் சட்டத்தில் உள்ளடங்கிய போதிலும் தற்போதைய நிலைமைக்கு இதன் ஒழுங்கு விதிகள் போதுமானதாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக இவற்றிற்கு தீர்வு என்ற வகையில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் முகவர் நிலையம் (ICTA) மற்றும் இலங்கை கணினி உடனடி பதில்கள் (CERT) குழுவினால் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் புதிதாக திருத்த சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்கு தேவையான தகவல்களை உள்ளடக்கிய ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆவணத்தை அடிப்படையாக கொண்டு புதிய சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்காக சட்ட வரைபு பிரிவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சரினால் அமைச்சரவையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் சட்டம்... அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியது. ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் சட்டம்... அமைச்சரவையும்  அங்கீகாரம் வழங்கியது. Reviewed by Madawala News on September 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.