பதுளை டைலர் முசம்மில் – மெல்லப் பெய்யும் ஒரு பெரு மழை.



எமது அன்றாட சமூக வாழ்வில் பலவிதமான கதாபாத்திரங்களை

 சந்திக்க நேரிடுகின்றது , சிலர் எம் நினைவில் தங்கிவிடுவார்கள் , சிலர் நினைவு கூறப் படுவார்கள் , இன்னும் பலர் மறந்து விடுவார்கள்... 


இதில் எந்தவகை சார்ந்தவர்களும் அவரவர் அந்ததந்த சமூகத்தில் ஏற்ற கதாபாத்திரத்தை பொறுத்தே அமையும்..


அந்த வகையில் என் சமூக வாழ்க்கையிலும் சரி சொந்த வாழ்க்கையிலும் சரி எனது நினைவில் அடிக்கடி நினைவு கூறப்படும்  வாழ்வில் மறக்க முடியாத சில கதாபாத்திரங்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர்தான் எனது வகுப்புத் தோழன் எம் ஐ எம் முஸம்மில், 
இவர் எனது வகுப்புத் தோழன் என்றதும் , சிறு வயது முதல் எனது இணை பிரியா நண்பன் என்று எல்லாம் நினைத்து விடாதீர்கள். 


நானும் அவரும் ஒரே வகுப்பில் கற்றாலும் அக்காலத்தில் அவர் நண்பனாக இருந்தது எனது இளையசகோதரர்களுடன் என்பது தான் உண்மை. 


தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களால் பாடசாலை வாழ்க்கையில் தரம் 10 கற்கும் போதே எதிர்கால தொழில்வாயிப்புக்கு அஸ்திவாரமிட டெயிலர் தொழில் கற்க  மாலையில் சென்றுவிடுவார், 


         பல சவால்களுக்கு முகங்கொடுத்து சிறுவயதிலேயே தன்குடும்பத்தை தாங்கி நிற்க தூணாக செயல்பட்ட அவர் இன்று பதுளையில் ஒரு கைதேர்ந்த டைலராக தானும் வாழ்ந்து இன்னும் பலரை வாழவைத்துக் கொண்டும் இருக்கின்றார் இந்த முஸம்மில் டைலர்..  


இவரை பற்றி அறிமுகம்செய்ய பல பக்கங்களை எழுதி விளக்கமளிக்க தேவை இல்லை. இவரது சொந்த வாழ்க்கையில் ஒருநாள்  அவருடைய தம்பியுடன் நடந்த ஒரு சம்பாசனையே  போதுமானது . ( அவருக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ தெரியாது )


 அவர் தம்பி கொழும்பிலிருந்து பெருநாளைக்கு அவரைக்காண பதுளைக்கு வந்துள்ளார். “ நானா உனக்கு நல்லதொரு ஷர்ட் கொண்டுவந்துள்ளேன் ,” என்று கூறி தனது அன்பளிப்பை நீட்டிய போது அதை எடுத்து பார்த்த நானா,  ( முஸம்மில் டைலர் ) இது சுமார் ஐயாயிரம் மட்டும் பெருமதியாக இருக்கும் அல்லவா . நான் இதைமாதிரி எல்லாம் உடுக்க மாட்டேன். இந்த காசுக்கு எனக்கொரு ஷர்ட் வாங்கி இன்னும் நான்கு பேருக்கு இதைமாதிரி வாங்கி உடுக்கக்  கொடுப்பேன். என்னுடன் சேர்ந்து இன்னும் நான்கு பேர் சந்தோசப்படுவார்கள்.” என்று கூறி தம்பியின் அன்பளிப்பை ஏற்க மறுத்துவிட்டார். இந்த முஸம்மில் டைலர்.



ஏழைகளுக்கு உணவளிப்பதில் அதீத விருப்பங் கொண்ட அவர் பல இளைஞர்களின் தொழில் வாய்ப்புக்கான  வழிகாட்டியாகவும் செயல் பட்டுவருவதை தனிப்பட்டவகையில் நான் அறிந்து வைத்துள்ளேன். 
  
டைலர் முஸம்மிலின் தையல் கடை.
         


  அராவாரமான உழைப்பால் பல சொத்து சுகங்களை சம்பாதிக்க ஆசைப்படாத அவர் தனக்கான வாழ்வியல் அடிப்படைகளை அளவோடு சம்பாதித்து அடுத்தவன் வாழ வழிதேடிக் கொண்டிருப்பார். 


அதே வேளை மாப்பிள்ள கோர்ட் (blazer ) என்றால் அது முசம்மில் டைலர் தான் ..  பிரபல ஹமீதியா வோடு கூட போட்டிக்கு தைப்பார். பதுளையில் வைத்தியர்கள் , அமைச்சு செயலாளர்கள் , நீதிவான்கள் வழக்கறிஞர்கள் , விரிவுரையாளர்கள் , தொழிலதிபர்கள் போலிஸ் உயரதிகாரிகள் , முதல் சாமான்யர்கள் வரைக்கும் இவரது வாடிக்கையாளர்கள்... 
 இவரது கடையில் “ மாப்பிள்ள கோர்ட் களை   ( blazer )”  வாடகைக்கு வழங்குவதும் உண்டு, ஒரு முறை இவரது வாடிக்கையாளர் ஒருவர் இவரிடம் வாடகைக்கு எடுத்துச் சென்ற மாப்பிள்ளை கோர்ட்டை திருப்பிதந்து விட்டுச் சென்ற பிறகு கோர்ட் பையில் இருந்த  கடித உரையில் ஒரு தொகை பணம் இருப்பதை கண்டு அதை உரியவரிடம் தொடர்பு கொண்டு கையளித்துள்ளார்.


 எனது நினைவு படி அதில் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் இருந்துள்ளது. இதில் விசேடம் என்னவென்றால் உரிய கோர்ட்டை பெறுவதற்காக அவர் வந்த அவரது வாகனத்தில் “ சின்ஹ லே ” ஸ்டிகர் ( ஓட்டுச் சித்திரம் ) இருந்துள்ளது. 


அந்த வாடிக்கையாளர் இவருக்கு நன்றி சொல்வதற்காக திரும்பி வந்த வேளை அந்த        “ சின்ஹலே ” ஸ்டிகர் கழட்டப் பட்டிருந்துள்ளது. 


அவரது அனுமதியின்றி இவர்பற்றிய விடயங்களை நான் இங்கு பதிவிடுவது எந்தளவு சரியான விடயம் என்று தெரியாது, ஆனால் இவர் போன்ற எமது சமூக அடையாளங்களை வெளிக்கொண்டு வருவது எம்போன்றவர்களின் தார்மீக பொறுப்பு என உணர்கின்றேன். 


    
பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகிச் சென்றாலும் கல்வி பற்றிய தேடல் இவரோடு ஒற்றிபிறந்த குணம் என்று சொல்லலாம். தனக்கு தேவையான விடயங்களில் தேவையான தெளிவை பெற அதற்கான நூல்களை தேடிச்சென்று வாங்கிவருவார் . 
 


    இதற்கு ஒரு உதாரண நிகழ்வாக இவ்விடயத்தை கூறலாம்,,, , இன்று  எம் சமூகத் தலைமைகள் சிலரால் சர்ச்சையாக ஆக்கப் பட்டுள்ள ஷரியா சட்டதிட்டங்கள் சம்பந்தமாக மிகத் தெளிவான விளக்கமளிக்கக் கூடிய நூலொன்றை எழுதி வெளியிட்ட சட்ட வல்லுநர் சி ஜி வீர மந்த்ரியின் (Islamic jurisprudence ) இஸ்லாமிய நீதிய எனும் நூலை வாங்கி வந்து எங்கள் மத்தியில் சில சிந்தனை தெளிவுகளுக்கு
இன்றைய நடைமுறையிலுள்ள   எமது நாட்டு  கல்வித் திட்டத்தின் மூலம் இவரது திறமையை  அடையாளம் காணத் தவறிய எம் சமூக முறையில்,  விதிவிலக்காக இவரது சிறு பிராயத்தில்,  மட்டகளப்பு கல்லியன்காடு சஹிரா   பாடசாலையில் இவருக்கு  கல்வி கற்பித்த ஆங்கில ஆசிரியை திருமதி சி ஆர் சேவியர் அவர்கள் இவர் ஒரு மீத்திரன் மாணவன் என்பதை, முஸம்மில் டைலர் தரம் ஐந்தில் கல்வி கற்கும் போதே கண்டுகொண்டுள்ளார்.



இவரது குடும்பம்  பதுளைக்கு இடம்பெயர்ந்து வருமுன் இவர்கள் காத்தான்குடியிலேயே வசித்துள்ளார்கள், அவர் லீவுகாலங்களில் காத்தான்குடிக்குச் சென்றால் , அவருக்கு சிறுபிராயத்தில் கற்பித்த ஆசிரியர்களை , சிறுவயதில் அவருக்கு உதவிய ஊர் பெரியவர்களை , தந்தையின் நண்பர்களை காணச் சென்று நலம் விசாரிப்பது இவரது வழக்கமாகும். 



அப்படி ஆங்கில ஆசிரியை திருமதி சி ஆர் சேவியர் அவர்களைப் பற்றி விசாரித்து அறிந்து அவரைக்காணச் சென்றுள்ளார், தான் இன்னார் என்று தன்னை அறிமுகஞ் செய்து ஆசிரியருடன் உரையாடினாலும் அந்த வயோதிபம் அடைந்த அந்த ஆசிரியையால் முஸம்மிலை அடையாளம் காணமுடியாது போயுள்ளது. என்றாலும் சிலதையும் பலத்தையும் கதைத்துக் கொண்டிருந்த வேளை ,


 “ அடடே நீ அந்த பையனா ? என்ற அந்த ஆசிரியை கொஞ்சம் பொறு தம்பி வாரன் என்று கூறி உள்ளே சென்று மீண்டும் ஒரு குறிப்புப் புத்தகத்தை கையில் கொண்டு வந்து அதில் தான் 1980/ 02/ 04 ந் திகதி எழுதிய அன்றைய தினக் குறிப்பொன்றை எடுத்துக் காட்டியுள்ளார். 


உண்மையில் அது அந்த ஆசிரியரின் பாடப் பதிவு புத்தகம் ., அவரது ( record of work ) புத்தகத்தையும் அதில் அவர் எழுதியிருந்த பதிவையும் இங்கே காணலாம் .  
  
அதில் அவர் எழுதியுள்ளதாவது...............




“ அந்த வகுப்பில் முசாமீன் எனும் ஒரு கெட்டிக்கார  மாணவன் இருந்தான். அவருக்கு பிரத்தியேகமான வீட்டு வேலைகள் தேவையாக இருந்தது. அவர் சராசரி மாணவர்களை விட சற்று சிறியவராக இருந்தார். அவரது செயற்பாடுகள் நேர்த்தியாகவும் கலைத்தன்மையாகவும் இருந்தது. நான் அவரை ஊக்குவிப்பதற்காக வேண்டி சில வரைதல் மற்றும் எழுத்து  பயிற்சி செயற்பாடுகளை வழங்கினேன்” “ என்று எழுதியுள்ளார். 



இவிடத்தில் இந்த ஆசிரியத் தாயின்,  தன் மாணவன் பற்றிய தேடல் மற்றும் அவனது எதிர்காலம் பற்றிய அக்கறை , சுமார் நாற்பது வருடகால ஞாபகம் ,,,,,,  என்னவென்று எழுதுவதென்றே தெரியாது. 


 ,,,,,,, அந்த ஆசிரியத் தாய்க்கு எமது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்தையும் மட்டுமே தெரிவிக்க முடியும் ...


ஆக இவர்தான் எமது பதுளை முசம்மில் டைலர்........ ,  

 பாடசாலை வாழ்க்கை முடிந்து தொழில் வாய்ப்புக்களோடு பிரிந்து சென்ற நாம் மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட எமது சமூக வாழ்க்கை வித்திட்டது. 


சமூக வாழ்க்கையில் நாம் சந்தித்த சவால்கள் , கருத்துமோதல்கள் , பாரிய விமர்சனகுளின் போது அவற்றை சமநிலை படுத்தி நேர்த்தியாக நெறிபடுத்தி எங்களை சமநிலை படுத்தி எமது இறுதி இலக்கான விடய சாதனையை கொண்டுவந்ததில் இவரது பங்களிப்பு மிகவும் மகத்தானது, 


மக்கள் சபைகளில் கோட் சூட்டுடன் முன்வரிசையில் இடம் தேடும் கர்வத் தலைமைகளுக்கு மத்தியில் சபையின் ஓரத்தில் இருந்து தம் சிதனைக்கு வலுவூட்டும் இவர்போன்ற ஆளுமைகளே சமூகத் தூண்கள் . 

அன்புடன் ஏ எம் எம் முஸம்மில்.- பதுளை. 
  

பதுளை டைலர் முசம்மில் – மெல்லப் பெய்யும் ஒரு பெரு மழை. பதுளை டைலர் முசம்மில் – மெல்லப் பெய்யும் ஒரு பெரு மழை. Reviewed by Madawala News on September 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.