திவுலபிடிய புத்தர் சிலை அவமதிப்புக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்


திவுலப்பிடிய பகுதியில் உள்ள ஒரு சிலரால் புத்தர் சிலை சேறு பூசப்பட்டு அவமதிக்கப்பட்ட
விவகாரம் தொடர்பாக சமுக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இருந்தன.

உண்மையில் இந்த செயலை யார் செய்தாலும் வண்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இது போன்ற செயல்களை இஸ்லாமும் முஸ்லிம்களும் ஒரு போது ஆதரிப்பதில்லை.

இந்தச் செயலை யார் செய்திருந்தாலும் குறிப்பிட்ட நபர்களை பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அரசை வேண்டிக் கொள்வதுடன் இது தொடர்பாக இஸ்லாம் கூறும் வழிகாட்டுதலையும் அறிய கடமைப்பட்டுள்ளோம்.

இதை பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்லிக்காட்டுகிறான்
அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
📖திருக்குர்ஆன் 6:108

இந்த வசனத்தில் அல்லாஹ் என்ன சொல்கிறான் என்றால் ‘அவர்கள் எதை வணங்கினார்களோ கடைசியாக வணங்கி முடிந்து உயிர் போன பிறகு இறைவன் அவர்களை மறுமை நாளில் எழுப்பும் போது அல்லாஹ்விடம் தான் வருவார்கள்… அப்போது அல்லாஹ் கணக்குத் தீர்த்துக் கொள்வான்.. நீங்கள் வாயால் கூட திட்டிவிடாதீர்கள்’ என அல்லாஹ் சொல்கிறான்.

நம்முடைய இறைவனை பற்றி எடுத்து சொன்னாலுமே அவர்களுடைய கடவுளை பற்றி தவறாக பேசி விடாதீர்கள் என சொல்லிக்காட்டுகிறான்

எனவே தவறாக பேசக்கூடாது எனும்போது சிலைகளை உடைக்கவும் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு.

”எங்கள் இறைவன் அல்லாஹ்வே”என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
திருக்குர்ஆன் 22:40

எனவே பிற மத கடவுள்களை திட்டுவது அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களை தாக்குவது போன்ற விடயங்கள் இஸ்லாத்திலிருந்து முற்றிலுமாக தடுக்க பட்டவையாக இருக்கின்றது.
எனவே பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் வாழும் போது பிறமதத்தவர்களின் நம்பிக்கையையும் மதித்து வாழ வேண்டும் என்பதை ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நினைவுபடுத்துகிறது.



දිවුලපිටිය ප්‍රදේශයේ යම් පුද්ගලයන් විසින් බුදුපිලිමයකට මඩ තවරා අගෞරව කිරීමේ සිද්ධියක් සමාජ මාධ්‍ය හරහා සැරසිරමින් පවතියි.
නිසැකවම මෙම කටයුත්ත කවුරු කළද දැඩිව හෙළා දැකිය යුත්තකි.

මෙවන් කටයුතු ඉස්ලාමය හා මුස්ලිම්වරු කිසි සේත්ම අනුමත කරන්නේ නැත.

මෙම සිද්ධියට සම්බන්ධ අය කවුරුන් වුවද නිතීය ඉදිරියට ගෙන දැඩි දඬුවම් පමුණූවිය යුතු බව ශ්‍රී ලංකා තව්හීද් ජමාඅත් සංවිධානය අවධාරාණය කරන අතර මෙය සම්බන්ධව ඉස්ලාම් දහමේ මතය විග්‍රහ කිරීම ද අපේ වගකීමයි.

අන් ආගමික දෙවිවරු සම්බන්ධව ඉස්ලාමීය ස්ථාවරය

මෙය සම්බන්ධව පරිශුද්ධ වු අල්-කුර්ආනයේ අල්ලාහ් විඝ්‍රහ කරයි.

ඔවුහු අල්ලාහ් හැර කවරෙකු වෙත ප්‍රාර්ථනා කරන්නේ ද ඔවුනට නුඹලා බැණ නොවදින්න. (එසේ කළහොත්) ඔවුහු කිසිඳු දැනුමක් නොමැතිව සීමාව ඉක්මවා අල්ලාහ්ට බැණ වදිති.170 මෙලෙස සෑම ජන සමාජයකට ම ඔවුන්ගේ ක්‍රියාව අලංකාර කර පෙන්වීමු. පසුව ඔවුන්ගේ යළි පිවිසුම ඔවුන්ගේ දෙවියන් වෙත ම ය. ඔවුන් කරමින් සිටි දේ ගැන ඔහු ඔවුනට දැනුම් දෙනු ඇත.

පරිශුද්ධ වු අල් කුර්ආන් 6:108

පරිශුද්ධ වු අල් කුර්ආනයේ මෙම වැකිය මඟින් අල්ලහ් සියලු මිනිසුන් මරණින් මතුව පැමැණෙන්නේ අල්ලහ් වෙත හෙයින් අල්ලාහ් ඔවුන් පිලිබඳව කටුයුතු කරන නිසා කිසිම අවස්ථාවට අන් ආගමික දෙවි වරුන්ට බැණ නොවදින ලෙස පවසා ඇත.

අල්ලාහ්ට ඔවුන් බැණ වැදුදන ඔවුන්ට කිසි විටක නොබනිණ ලෙස අල්ලාහ් අපට අණ කර ඇත.

එබැවින් බැණ වැදීම ම තහනම් කර තිබෙන අවස්ථාවක පිළිම වලට නිගරු කිරීමට කිසිම අනුමැතියක් ඉස්ලාම් දහමේ නොමැති බව ඉස්ලාම් දහමේ ස්ථාවරයයි.

 “අපේ දෙවියන් අල්ලාහ් ම යැ”යි ඔවුන් ප්‍රකාශ කළ බැවින් අයුක්ති සහගතව තමන්නේ නිවෙස් වලින් ඔවුහු නෙරපා දමනු ලැබූ හ. අල්ලාහ් මිනිසුන්ගෙන් ඇතැමෙකු ලවා ඇතැමෙකු නොවැළැක්වූයේ නම් ආරාමයන්, දේවස්ථාන, සිද්ධස්ථාන සහ අල්ලාහ්ගේ නාමය අධිකව සිහි කරනු ලබන පල්ලි සුනු විසුනු කරනු ලැබ ඇත්තේ ය.433 තමාට උදව් කරන අයට අල්ලාහ් ද උදව් කරයි. අල්ලාහ් බලවතෙකි අබිබවන්නෙකි.

පරිශුද්ධ වු අල් කුර්ආනය 22:40

එහෙයින් අන් ආගමික දෙවි වරුන්ට බැණ වැදීම ඔවුන්ගේ පූජනීය ස්ථාන වලට හානි කිරීම, නිගරු කිරීම යනාදිය ඉස්ලාමයේ සම්පූර්නයෙන් තහනම් කර ඇත.

එසේ හෙයින් විවිධ ජාතීන් ජීවත් වන රට සියලු ආගමික විශාවසයන් ගරු කර ජීවත් විය යුතු බව ශ්‍රී ලංකා තව්හීද් ජමාඅත් සංවිධානය සිහි කරයි.
திவுலபிடிய புத்தர் சிலை அவமதிப்புக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் திவுலபிடிய புத்தர் சிலை அவமதிப்புக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் Reviewed by Madawala News on September 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.