ஊடகவியலாளர்கள் கொண்டு செல்லும் செய்தி சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்துகிறது.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஊடகவியலாளர்களின் பணி என்பது எப்போதும் ஒரு முக்கியமான பணியாக இந்த சமூகத்தில்
பார்க்கப்படுகிறது என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

வெறுமனே இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் மாத்திரமல்ல சமூகத்திற்குள் ஊடகவியலாளர்கள் கொண்டு செல்லும் செய்தியானது மிகப்பெரிய தாக்கத்தை நிச்சயமா ஏற்படுத்துகின்றது.

ஆகவே, ஊடகவியலாளர்கள் இந்த சமூகத்தில் மேற்கொள்கின்ற பணியை மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியாக நாங்கள் பார்க்கின்றோம்.

சமூகங்களில் நடக்கின்ற வேலைகளாக இருக்கலாம் அல்லது எதிர்பாராத விதமாக நடைபெறும் இயற்கை அனர்த்தங்களாக இருக்கலாம் அல்லது ஏதோவொரு நிகழ்வாக இருக்கலாம் அந்த செய்தி தன்மையை ஊடகவியலாளர்கள் சமூகத்திற்கு கொண்டு செல்லும் போது ஒரு காத்திரமாக, அந்த சமூகத்தின் நன்மை கருதி கொண்டு செல்ல வேண்டும் அதைத்தான் நான் அரசாங்க அதிபர் என்ற ரீதியில் உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்.

அதை விடுத்து ஒரு முரண்பாடான செய்தியை நாங்கள் மக்களுக்கு கொண்டு செல்வோம் என்றால் அது ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது .

ஆகவே, சமூகத்தில் பணி புரிய எத்தனையோ விதமான தொழில்கள் இருக்கின்றன ஆனால் சுதந்திரமாக நீங்கள் ஊடகவியலாளராக இந்தப் பணியினை மேற்கொள்கின்றீர்கள். எமது மாவட்டத்தில் எவ்வாறான சந்தர்ப்பமாக இருந்தாலும் அதை முக்கியமாக நீங்கள் அந்த செய்தியை சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு செல்லும் போது மிகவும் பொறுப்பு வாய்ந்தவராக செயற்பட வேண்டும் என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

உங்களுக்குத் தெரியும் எமது மாவட்டம் தொடர்ந்தும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு வருகிறது அது வெள்ளமாக இருக்கலாம் வரட்சியாக இருக்கலாம் சுனாமியாகா இருக்கலாம் அவ்வாறு பலதரப்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்படுகின்ற ஒரு மாவட்டமாகா எமது மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

ஆகவே, ஊடகவியலாளர்கள் அனைவரும் பொறுப்பு வாய்ந்த ஊடகப் பணியினை மேற்கொள்கின்ற போது இந்தப் பணியினை ஒரு பொறுப்பு வாய்ந்ததாக சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று உங்களிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

ஊடகவியலாளர்கள் கொண்டு செல்லும் செய்தி சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்துகிறது. ஊடகவியலாளர்கள் கொண்டு செல்லும் செய்தி சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்துகிறது. Reviewed by Madawala News on September 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.