கொரோனாவால் அமெரிக்க செல்வந்தர்களுக்கு இலாபம்.



போபஸ் நிறுவனம் அமெரிக்காவின் மிகப் பெரிய
 செல்வந்தர்கள் 400 பேரைக் கொண்ட போபஸ் 400 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுச் சூழலில் அமெரிக்கச் செல்வந்தர்கள் முன்னரை விடவும் சிறப்பாகச் செயலாற்றுவதாக அது குறிப்பிட்டது. பட்டியலில் இருப்போரது சொத்துகளின் மொத்த மதிப்பு 3.2 டிரில்லியன் டொலர்களாகும்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அது 8 வீதம் அதிகம் என்று போபஸ் கூறியது. இதுவரை இல்லாத அளவில், 233 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

பட்டியலில் இடம் பிடிக்க, அவர்களின் சொத்து மதிப்பு குறைந்தது 2.1 பில்லியன் டொலராக இருக்க வேண்டும்.

அமேசன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் போசன் இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

போசனின் சொத்து மதிப்பு 179 பில்லியன் டொலர்கள் என்பதோடு அது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 57 வீத அதிகரிப்பாகும்.
கொரோனாவால் அமெரிக்க செல்வந்தர்களுக்கு இலாபம். கொரோனாவால் அமெரிக்க செல்வந்தர்களுக்கு இலாபம். Reviewed by Madawala News on September 12, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.