நான் தோற்றேனா? தோற்கடிக்கப் பட்டேனா? என்பதை ஊர்மக்கள் அறியாமல் இல்லை.



பைஷல் இஸ்மாயில் -
பதவிகளை கொடுப்பதும், இறைவன். தடுப்பதும் இறைவன்.
கடந்த 35 வருடங்களின் பின்னர் எமது ஊரின் பாராளுமன்ற உறுப்புரிமை எனும் தாகத்தை போக்குவதற்காக கடந்த இரண்டு வருடங்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை எனக்கு தேசியப்பட்டியலைத் தந்து அட்டாளைச்சேனை பிரதேசத்தையும் எமது மக்களையும் அழகுபடுத்தி கௌரவப்படுத்தியது.

அதனை தக்கவைத்துக்கொள்ள நாம் தவறிவிட்டோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

அவரது சொந்த ஊரான அட்டாளைச்சேனை இல்லத்தில் இன்று (12) காலை இடம்பெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனக்குக் கிடைத்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் மூலம் என்னால் முடியுமானளவு மாவட்டத்திற்கும் குறிப்பாக எமது அட்டாளைச்சேனை பிரதேசத்தையும், அதனை அன்டிய கிராமங்களையும் சிறந்த முறையில் எவ்வித பாகுபாடுகளுமின்றி இன மத வேறுபாடுகளுக்கப்பால் எல்லாப் பிரதேசங்களுக்கும் பல அபிவிருத்திகளை செய்திருக்கின்றேன். இதனை எல்லா இன மக்களும் நன்கறிவார்கள்.

அது மாத்திரமல்லாமல், கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவத்துறை அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் கூட, பல கோடி ரூபாய் நிதியின் மூலம் மூன்று மாவட்டங்களிலும் பல ஆயுர்வேத வைத்தியசாலைகள், மருத்துவ உத்தியோகத்தர்கள் தங்கும் விடுதிகளை அமைத்துக்கொடுத்துள்ளதுடன், அதற்குத் தேவையான வைத்திய உபகரணங்கள், தளபாடங்கள் போன்ற பல விடயங்களை என்னாலான முயற்சிகள் மூலம் செய்து கொடுத்துள்ளேன். இதை யாரும் மருப்பதற்கில்லை.


நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் களத்தில், தலைமையின் அழுத்தமான வேண்டுகோளுக்கிணங்க இந்தத் தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்பட்டேன். ஊருக்கு கிடைத்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஊர் ஒற்றுமைப்பட்டு 35 வருடங்களின் பின்னர் வாக்களித்து ஒரு பாராளுமன்ற உறுப்புரிமை பெறவேண்டும் என்ற நன்னோக்கில் மாவட்டம் முழுவதும் ஊர் ஊராய் பிரச்சாரம் செய்து வெற்றிக்காக பாடுபட்டு உழைத்தோம்.


இறுதி வரைக்கும் சளைக்காமல் நாங்கள் செய்த முயற்சிக்கு இந்த மாவட்டத்திலுள்ள மக்கள் 26153 விருப்பு வாக்குகளை அளித்து எனக்கு ஆதரவுக்கரம் தந்தீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

அல்ஹம்துலில்லாஹ், 

இருப்பினும் வெற்றிபெற முடியவில்லை, இது இறைவனின் நாட்டமாகும். அதை நாம் பொருந்திக்கொள்ள வேண்டும்.


இருந்தாலும் நான் தோற்றேனா? தோற்கடிக்கப்பட்டேனா? என்பதை ஊர் மக்கள் அறியாமல் இல்லை. எனது வெற்றியின் பங்களிப்பில் ஈடுபட்டவர்களே எனது தோல்விக்கு பிரதான சூத்திரதாரிகளாக செயற்பட்டார்கள் என்பது கசப்பான உண்மை என்பது உங்களுக்கு தெரியாமல் இல்லை.

எமது மக்கள் ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். நான் எனக்காக களமிறங்கி வேலை செய்ததை விட எமது ஊர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்து இரவு பகல் கண் விழித்து வேலை செய்தேன். 


இந்த தேர்தலின் முடிவின் மூலம் நான் அரசியலை விட்டு ஒதுங்கப் போகின்றேன், கட்சி மாறப் போகிறேன் என்றெல்லாம் பல போலிப் பிரச்சாரங்களை சிலர் முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் நினைப்பதுபோல் எதுவும் நடக்காது என்பதை நான் அவர்களுக்கு உறுதிப்பட தெரிவிக்க விரும்புகின்றேன்.  
 

நான் மக்களுக்காகவே அரசியலுக்கு வந்தவன், மக்களுக்காகவே அரசியல் செய்பவன், நான் கட்சி மாறப் போவதும் இல்லை, அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதும் இல்லை. நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இந்த ஊர் மக்களை அனாதையாக்க விரும்பவும் இல்லை. இந்தத் தேர்தலில் மக்கள் என்னை நிராகரிக்கவில்லை மாறாக சில சகுனிகளினால் திட்மிட்ட சதியின் மூலம் தோற்கடிக்கப் பட்டிருக்கின்றேன். என்பதுதான் உண்மையாகும். 


இன்ஷா அல்லாஹ் எனது அரசியல் பயணம் மக்களுக்காகவே என்றும் தொடரும் என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார். 

நான் தோற்றேனா? தோற்கடிக்கப் பட்டேனா? என்பதை ஊர்மக்கள் அறியாமல் இல்லை. நான் தோற்றேனா? தோற்கடிக்கப் பட்டேனா? என்பதை ஊர்மக்கள் அறியாமல் இல்லை. Reviewed by Madawala News on August 09, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.