சகல இன மக்களையும் இணைத்துச் செல்லும் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் மஹிந்த ராஜபக்ஸக்களுடன் முஸ்லிம் மக்களும் இணைந்து கொள்ள வேண்டும்.



ஏ.பி.எம்.அஸ்ஹர்
சகல இன மக்களையும் இணைத்துச் செல்லும் கோட்டாபய ராஜபக்ஸ
மற்றும் மஹிந்த ராஜபக்ஸக்களுடன் முஸ்லிம் மக்களும் இணைந்து கொள்ள வேண்டும் என முன்னாள்.மத்திய வங்கியின் ஆளுநரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் வேட்பாளருமான அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.


கல்முனை நகர மண்டபத்தில் முன்னாள் பிரதியமைச்சர் மையோன் முஸ்தபா தலைமையில் இன்று நடை பெற்ற புத்திஜீவிகள் மற்றும் தொழில் துறையினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.



தொடர்ந்து இவர் இங்கு 
உரையாற்றுகையில் 
மஹிந்த ராஜபக்ஸ் ஆட்சியில் நான் 9 வருடங்களாக மத்திய வங்கிதின் ஆளுநராக செயல்பட்டுள்ளேன் மஹிந்த ராஜப்கஸ மற்றும் கோட்டபாய ராஜபக்ஸ ஆகியோருடன மிகவும் நெருக்கமாகப்பழகியுள்ளேன்.


இவர்களிடம் நாட்டுப்பற்று அதிகம் உள்ளது.அதே போன்று சகல இன மக்களையும் நேசிக்கின்ற தலைவர்கள் ஆனால் முஸ்லிம் மக்கள் கடந்த முறை கோட்டபாய ராஜபக்ஸவுக்கு ஆதரளிக்கவில்லை .


அதுவும் பரவாயில்லை தற்போது ஒரு சந்தர்ப்பம் வந்துள்ளது.


எங்களது ஸ்ரீ லங்கா பொதுஜன.பெரமுனவுக்கு வாக்களித்து எமது ஆட்சியில் பங்காளியாக சேர்ந்து கொள்ளுங்கள் இதற்காக.நாம் எம்து கரங்களை நீட்டுகின்றோம் இக்கரத்தைப்ப்ற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் பற்றி முஸ்லிம் சமுகத்திடம் ஏற்படுத்தப்ப்ட்டிருக்கும் தேவையற்ற சந்தேகங்களைக்களைந்து எம்மோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

இவ்விரு தலைவர்களும் சிறந்த தலைவர்கள்.சிறந்த.பொருளாதார சிந்தனை கொண்ட தலைவர்கள் இவர்களால் மட்டுமே நாட்டின் எதிர் காலத்தைக்கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
சகல இன மக்களையும் இணைத்துச் செல்லும் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் மஹிந்த ராஜபக்ஸக்களுடன் முஸ்லிம் மக்களும் இணைந்து கொள்ள வேண்டும். சகல இன மக்களையும் இணைத்துச் செல்லும் கோட்டாபய ராஜபக்ஸ  மற்றும் மஹிந்த ராஜபக்ஸக்களுடன் முஸ்லிம் மக்களும் இணைந்து கொள்ள வேண்டும். Reviewed by Madawala News on July 12, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.