“ஜம்இய்யாவிற்கு எதிராக பிழையான குற்றச்சாட்டுக்களை மறுத்தலும் அது பற்றி பொது மக்களை விழிப்பூட்டலும் ”



ஜம்இய்யாவிற்கு எதிராக பிழையான குற்றச்சாட்டுக்களை
மறுத்தலும் அது பற்றி பொது மக்களை விழிப்பூட்டலும்


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பெயரை மாசுபடுத்தும் வகையில் பல பிழையான தகவல்களை மக்கள் மயப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நிரல் நடைபெறுவதாக ஊடகங்கள் வாயிலாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு அறியக் கிடைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ஏனைய சில விடயங்களுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை பிழையாக தொடர்புபடுத்தி உண்மைக்கு புறம்பான தகவல்கள் பொது மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு பொதுமக்களின் உணர்வுகளை தூண்டும் ஒரு செயற்பாடு நடைபெற்று வருகின்றது.

பொறுப்பற்ற இச்செயற்பாட்டை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. அத்துடன் பிழையான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி சமூகங்களுக்கிடையில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இவ்வாறான பிரசாரங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஜம்இய்யா எதிர்பார்க்கின்றது.

அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
“ஜம்இய்யாவிற்கு எதிராக பிழையான குற்றச்சாட்டுக்களை மறுத்தலும் அது பற்றி பொது மக்களை விழிப்பூட்டலும் ” “ஜம்இய்யாவிற்கு எதிராக பிழையான குற்றச்சாட்டுக்களை மறுத்தலும் அது பற்றி பொது மக்களை விழிப்பூட்டலும்   ” Reviewed by Madawala News on July 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.