பிற சமூகத்திற்கு மத்தியில் இன ஒற்றுமையை ஏற்படுத்த தேர்தல் களம் எமக்கு ஒரு பெரும் வாய்ப்பாகும்



( ஐ.ஏ. காதிர் கான் )

எமது சமூக உரிமை, அபிலாஷை, அபிவிருத்தி மற்றும் 
பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்போம் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.


இந்த நாட்டில் இன ஐக்கியத்தை ஏற்படுத்த எதிர்வரும் பொதுத்தேர்தல் எமக்கான ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். இதனை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். “முஸ்லிம் சமூகத்தினர் இந்த நாட்டை நேசிப்பவர்கள் ” என்ற நம்பிக்கையையும் ஏனைய சமூகத்தவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் வேட்பாளர் பாரிஸ் இதன்போது கேட்டுக்கொண்டார்.



கம்பளையில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிடார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது,
பிற சமூகத்திற்கு மத்தியில் இன ஒற்றுமையை ஏற்படுத்த இந்தத் தேர்தல் களம் எமக்கு ஒரு பெரும் வாய்ப்பாகும். 


இன ஐக்கியத்தையும் நம்பிக்கையையும் மீண்டும் இந்த நாட்டில் கொண்டு வர வேண்டும் என்றால், முஸ்லிம் சமூகம் இந்த நாட்டை நேசிக்கும் குடி மக்கள் என்றும், ஆளும் அரசாங்கத்தின் பங்காளிகள் என்றும் நாம் எம்மை அடையாளம் செய்து, எமது கடந்த கால வழுக்களைத் துடைத்தெறிந்து நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.



இன்று நாட்டின் பெரும்பான்மைச் சமூகம் முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் மூலம் இந்த நாட்டின் முஸ்லிம்களின் வாக்குகள் இல்லாமலும் ஜனாதிபதி ஒருவர் தெரிவாக முடியும் என்ற எண்ணத்தை விதைத்தது மட்டுமல்லாமல், ஆளும் கட்சிக்கு ஒருபோதும் முஸ்லிம்கள் ஆதரவில்லை என்ற சிந்தனையையும் விதைத்துள்ளார்கள். 


இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு விடைகாண வேண்டும் என்பது தான், இந்தத் தேர்தல் களத்தின் தேவையாக உள்ளது.


தேசிய கட்சிகளின் மூலம் பாராளுமன்றம் சென்று முஸ்லிம் சமூகத்தை வழி நடாத்திய, காலம் சென்ற மர்ஹூம்களான பதியுதீன் மஹ்மூத், ஏ.சீ.எஸ். ஹமீத், சேர் ராசிக் பரீத், பாக்கிர் மாக்கர் போன்ற நமது மூத்த தலைவர்கள் இன ஐக்கியத்தை முன்நிறுத்தி அரசியலை முன்னெடுத்துச் சென்றார்கள்.
இவ்வாறான இன ஒற்றுமையையும் நம்பிக்கையையும் மீண்டும் இந்நாட்டில் கொண்டு வர, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து பொதுஜன பெரமுன என்ற பலம் வாய்ந்த ஆளும் கட்சிக்கு எமது ஆதரவுகளை வழங்க முன் வருவோம் என்றார்.

( ஐ.ஏ. காதிர் கான் )
பிற சமூகத்திற்கு மத்தியில் இன ஒற்றுமையை ஏற்படுத்த தேர்தல் களம் எமக்கு ஒரு பெரும் வாய்ப்பாகும் பிற சமூகத்திற்கு மத்தியில் இன ஒற்றுமையை ஏற்படுத்த தேர்தல் களம் எமக்கு ஒரு பெரும் வாய்ப்பாகும் Reviewed by Madawala News on July 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.