கிழக்கு மாகாணத்தில் இறக்குமதி செய்யப் பட்டுள்ள அரசியல் தலைமைகளை விரட்டியடித்து எம்மை நாமே ஆளக்கூடிய தலைமைகளை தெரிவு செய்யவேண்டிய காலகட்டம் இது.


நூருல் ஹுதா உமர்--
கிழக்கு மாகாணத்தில் இறக்குமதி செய்யப் பட்டுள்ள அரசியல் தலைமைகளை விரட்டியடித்து
எம்மை நாமே ஆளக்கூடிய நமது பிரதேச தலைமைகளை தெரிவு செய்ய வேண்டிய ஆபத்தான காலகட்டமொன்றில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , தேசிய காங்கிரஸின் சம்மாந்துறை தொகுதி வேட்பாளருமான பேராசிரியர் எஸ் எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார் .

ஒலுவில் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் அங்கத்துவம் பெற்றிருந்த அக்கட்சியின் பெருந்தொகை யான ஆதரவாளர்கள் உள்ளிட்ட மாற்றுக் கட்சி சார்ந்தோர் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு நேற்று முன்தினம் ஒலுவில் பிரதேசத்தில் இடம் பெற்றது . இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் , எமது கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் எம்மத்தியில் காணப்படும் சில கட்சிகளின் தலைமைகள் இம்மாகாணத்தைச் சேர்த்திராத தலைமைகளாக இருந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறான தலைமைகள் நமது மக்களின் அபிலாஷைகளை கடந்த காலங்களில் திறைவேற்றிய வரலாறுகள் கிடையாது . நமது மக்களை இத்தலைமைகள் தனது சுயநல தேவைகளுக்காக வெறும் பகடைக்காய்களாக வைத்துக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறான வெளி மாவட்ட , வெளி மாகாணங்களைச் சேர்ந்த தலைமைகளை விரட்டி அடித்து உள்ளூர் தலைமைகளை அடையாளம் காண வேண்டிய தருணமொன்றில் தாமிருக்கின்றோம் . நமது மண்ணையும் , நமது மக்களையும் இவ்வாறான தலைமைகளிடமிருந்து மீட்கவேண்டும் .

மறைந்த பெருந் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் . அஷ்ரஃபின் நாமத்தைப் பயன்படுத்திக் கொண்டு முன்னெடுத்துச் செல்லப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி போன்றன ஒரு சில மாவட்டத்தில் மாத்திரமே தமது கட்சியில் இத்தேர்தலில் களம் இறங்கியிருக்கின்றன. ஆனால் ஏனைய மாவட்டங்களில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து சுயநலத் தேவைக் காக இயங்கி வருவதை தமது மக்கள் இனியும் கண்டு கொல்லாமல் இருந்து விட முடியாது . இறக்குமதி செய்யப்பட்டு எம்மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கும் எமது சிறுபான்மைக் கட்சிகளின் தலைமைகள் தமது தேவைகளுக்காக அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்களையும் அரசியல் பிரமுகர்களையும் வைத்திருக்கின்றார்கள் . அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு ஆமாசாமிகளாக வைத்துக் கொண்டு தமது சுயநலத் தேவைகளுக்காக சில முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கு நம்மவர்களை இணங்கச் செய்து கொண்டிருக்கின்றதை நாம் இன்னும் புரியாதவர்களாக இருக்க முடியாது .

எம்மை எதிர்தோக்கி வரும் பாராளுமன்றத் தேர்தல் எமது சிறுபான்மைச் சமூகத்துக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக உள்ளது .

இத்தேர்தலில் நாம் கடந்த காலங்களைப் போல் போலியான பசப்பு வார்த்தைகளுக்கு சோரம் போய் வாக்களிப் போமேயானால் , நாம் மிகுந்த வேதனையடைய வேண்டி ஏற்படும் . நமது வருங்கால சந்ததிகள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டுமாக இருந்தால் இத்தேர்தலை நாம் ஓர் ஆயுதமாக பயன்படுத்தி உண்மையாளர்களை தெரிவு செய்ய வெண்டியுள்ளது . நமது மக்களை எவ்வாறு நிம்மதியாக வாழல் செய்ய வேண்டும் .

எம்மவர்களுக்கு எவ்வாறான தேவைகள் உள்ளன என்பதனை நாம் நன்கறிந்து செயற்பட்டு வருகின்றோம் . கடந்த காலங்களில் இப்பிராந்தியத்தில் பல்வேறான சேவைகளையும் சமூக தேவைகளையும்  தேசிய காங்கிரஸ் கட்சி செய்து வந்திருக்கின்றது . இக்கட்சியின் தலைமை முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் . அதாஉல்லா எமக்கெல்லாம் முன்னுதாரணமாய் இருந்து செயற்பட்டதனாலேயே நாம் அவரின் கரங்களைப் பலப்படுத்துவதற்காகவே இணைந்து கொண்டோம் என்றார்.
கிழக்கு மாகாணத்தில் இறக்குமதி செய்யப் பட்டுள்ள அரசியல் தலைமைகளை விரட்டியடித்து எம்மை நாமே ஆளக்கூடிய தலைமைகளை தெரிவு செய்யவேண்டிய காலகட்டம் இது. கிழக்கு மாகாணத்தில் இறக்குமதி செய்யப் பட்டுள்ள அரசியல் தலைமைகளை விரட்டியடித்து எம்மை நாமே ஆளக்கூடிய தலைமைகளை  தெரிவு செய்யவேண்டிய காலகட்டம் இது. Reviewed by Madawala News on June 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.