நீங்கள் நம்புவீர்களோ தெரியாது.. அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வர 21 ஆயிரம் கையொப்பம் இட்டேன். என் கை விரல் மரத்து போனது.



ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தான் நியமித்த 5
விசேட ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் நான்கு ஆணைக்குழுக்களின் விசாரணைகளை நிறைவு செய்து அதன் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்த நியமித்த ஆணைக்குழு மாத்திரம் இன்னும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொலன்நறுவையில் தனது தேர்தல் பிரசார அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பந்தமாக விசாரணைகளை நடத்திய ஆணைக்குழுவின் விசாரணைகளை நிறைவு செய்து அதன் அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தேன்.


இந்த மோசடியின் பிரதான சந்தேக நபரான இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பான ஆவணங்களில் தொடர்ந்தும் மூன்று நாட்களாக 21 ஆயிரம் கையெழுத்துக்களை போட நேரிட்டது.

மூன்றாவது நாள் தொடர்ந்தும் கையில் பேனாவை பிடித்திருந்ததால், கை மரத்து போனது.


இப்படி இருக்கும் போது நான் நியமித்த ஆணைக்குழு சம்பந்தமாக தேசிய பத்திரிகையில் வெளியான பொய்யான செய்தியை பார்த்து ஆச்சரியமடைந்தேன்.


அந்த செய்தியில் உள்ள அனைத்து விடயங்களும் பொய்யானவை எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

video:


நீங்கள் நம்புவீர்களோ தெரியாது.. அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வர 21 ஆயிரம் கையொப்பம் இட்டேன். என் கை விரல் மரத்து போனது. நீங்கள் நம்புவீர்களோ தெரியாது.. அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வர 21 ஆயிரம் கையொப்பம் இட்டேன். என் கை விரல் மரத்து போனது. Reviewed by Madawala News on June 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.