டயலொக், வாடிக்கையாளர்களுக்கான சேவையினை Whatsapp ஊடாக வழங்கும் செயற்பாடு.


டயலொக், வாடிக்கையாளர்களுக்கான சேவையினை Whatsapp ஊடாக வழங்கும் முதலாவது தொலைத்தொடர்பு சேவையாளராக திகழ்கின்றது.



இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் முதல் தொலைத்தொடர்பு சேவை வழங்குனராக, டயலொக் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் வாடிக்கையாளர்களுக்கு வாரத்தின் 7 நாட்களும் 24 மணித்தியாலமும் WhatsApp ஊடாக வழங்குகின்றது.


இந்த சேவையினை ஆரம்பத்தில் டயலொக் கிளப் விஷன் அங்கத்தவர்கள் அவர்களின் பரபரப்பு மிக்க நேர அட்டவணைக்கு அமைய மிகவும் வசதியான முறையில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.


மேலும் மிக விரைவில் ஏனைய வாடிக்கையாளர்களும் இந்த சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்

வாடிக்கையாளர்களுக்கான அனுபவத்தை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கும் சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கும் அதன் முயற்சிகளில், இன்று வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் வேறுபட்ட சேவையை வழங்குவதில் முன்னணியில் உள்ள டயலொக் இப்போது வாடிக்கையாளர்களுக்கான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளையும் தயாரிப்புகள் பற்றிய தகவல்களையும் வசதியாகவும் விரைவாகவும் வழங்குகின்றது. இந்த சேவையினை நீங்கள் எங்கிருந்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


டயலொக் கிளப் வி~ன் வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர் சேவை முகவருடன் உரையாடுவதுடன் இணைப்பின் நிலையினை சரிபார்த்தல், கணக்கு மிகுதியினை தெரிந்துக்கொள்ளல், பக்கேஜினை மாற்றுதல், இ-பில் சேவைக்கு பதிவு செய்தல், சேவைகள் தொடர்பான கருத்துக்களை வழங்குதல் போன்ற இன்னும் அதிகளவான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
டயலொக், வாடிக்கையாளர்களுக்கான சேவையினை Whatsapp ஊடாக வழங்கும் செயற்பாடு. டயலொக், வாடிக்கையாளர்களுக்கான சேவையினை Whatsapp ஊடாக வழங்கும் செயற்பாடு. Reviewed by Madawala News on February 12, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.