ஹஜ் முகவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து முகவர் நிலையங்களுக்கு ஹஜ் பொறுப்பினை வழங்க பிரதமர் தீர்மானம் ..



பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ , அரச ஹஜ் குழு மற்றும் ஹஜ் முகவர்கள் இடையேயான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று அலறி மாளிகையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் ஹஜ் முகவர்கள் முன்வைத்த வினயமான  கோரிக்கைகளுக்கு செவிசாய்த்த பிரதமர் ஹஜ்  முகவர் நிலையங்களுக்கே  ஹஜ் பொறுப்பினை இம்முறை  வழங்க தீர்மானித்துள்ளார்.

தங்கள் முகவர் நிலையங்கள் ஏற்கனவே ஹாஜிமார்களிடம் முற்பணங்களை பெற்று பல்வேறு முன்கொடுப்பனவுகளை செய்துள்ளதால் முகவர் நிலையங்கள் நிர்கதியாகும் நிலை ஏற்படும் எனவும் அதனை கருத்தில் கொண்டு  ஹஜ் முகவர் நிலையங்களுக்கே  இம்முறை ஹஜ் கோட்டாக்களை வழங்குமாறு பிரதமரிடம் ஹஜ் முகவர்கள் இந்த கலந்துரையாடலில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

ஹஜ் முகவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மிக குறைந்த கட்டணத்தில் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற வழியமைத்து கொடுக்கும் படி முகவர்களை வேண்டியுள்ளார்.

பிரதமரின் இந்த கோரிக்கைக்கு அமைவாக மூன்று பெக்கேஜ்களாக இம்முறை கட்டணங்களை நிர்ணயம் செய்ய ஹஜ் முகவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மக்காவில் ஐந்து நட்சத்திர தங்குமிடம் மதீனாவில் நட்டத்திர தங்குமிடம், மினாவில் பி தரத்திலான கூடாரம் உள்ளிட்ட வசதிகளுடன் ஹாஜிகளுக்கு ஹஜ் செய்ய வசதிகள் செய்துகொடுக்கப்படவுள்ளது.

இதற்கு அமைவாக  575000 ரூபா பெக்கேஜினை  2000 ஹாஜிகளுக்கு வழங்கவும் ,650000 ரூபா  பெக்கேஜினை  1150  ஹாஜிகளுக்கு வழங்கவும், 750000  ரூபா பெக்கேஜினை 350 ஹாஜிகளுக்கு வழங்கவும் இதன் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும் இம்முறை ஹஜ் முகவர்கள் வழங்கும் சேவையினை பொறுத்தே அடுத்த வருடம் அவர்களுக்கு இந்த  பொறுப்பினை  வழங்குவது தொடர்பில் தீர்மானிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் 5 லட்சம் ரூபாவுக்கு அரச ஹஜ் குழுவினால் அனைவருக்கும் ஹஜ் வாய்ப்பினை பெற்றுகொடுக்ககூடிய வாய்ப்பு இருந்தும் முகவர் நிலையங்களின் நலன் கருதி அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்குவதாக அரச ஹஜ் குழு தலைவர் மர்ஜான் பளீல் குறிப்பிட்டார்.

ஹஜ் முகவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து முகவர் நிலையங்களுக்கு ஹஜ் பொறுப்பினை வழங்க பிரதமர் தீர்மானம் .. ஹஜ் முகவர்களின் கோரிக்கைக்கு  செவி சாய்த்து முகவர் நிலையங்களுக்கு ஹஜ் பொறுப்பினை வழங்க பிரதமர் தீர்மானம் ..  Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.