‘போதையற்ற கிராமம் - ஒழுக்கமுள்ள இளைஞர் சமூகம்’


(எச்.எம்.எம்.பர்ஸான்)
இளைஞர்கள் மத்தியில் பெருகிவரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு,
“போதையற்ற கிராமம் - ஒழுக்கமுள்ள இளைஞர் சமூகம்” எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வொன்று, செம்மண்ணோடையில் (18) இரவு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வளவாளர்களாக கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, தியாவட்டவான் தாருஸ்ஸலாம் கலாபீட அதிபர் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி ஆகியோர்கள் கலந்துகொண்டு, போதைப்பொருள் பாவனைகளால் ஏற்படும் பாதிப்புகள், சமூகச் சீர்கேடுகள் தொடர்பில் விழிப்புரைகளை நிகழ்த்தினர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், போதைப் பாவனையை இல்லாதொழித்து, இளைஞர் சமூகத்தை நல்வழிப்படுத்தும் நோக்கில், செம்மண்ணோடை குபா ஜும்ஆப் பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில், குபா பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கத்தினர், செம்மண்ணோடை பகுதியில் அமைந்துள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு, குறித்த பகுதிகளில் வீதி நாடகம், ஆன்மீக உரைகள், துண்டுப் பிரசுர விநியோகம் போன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
‘போதையற்ற கிராமம் - ஒழுக்கமுள்ள இளைஞர் சமூகம்’ ‘போதையற்ற கிராமம் - ஒழுக்கமுள்ள இளைஞர் சமூகம்’ Reviewed by Madawala News on February 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.