தாய் தந்தையின் முறைப்பாட்டில், மக­ளையும் மரு­ம­க­னையும் சிலாபம் பொலிஸார் கைது செய்த சம்பவம்.


தனது தாய் மற்றும் தந்தை ஆகிய இரு­வ­ரி­னது வங்கிக் கணக்­கு­க­ளி­லி­ருந்து வங்கி அட்­டை­யினைப்
பயன்­ப­டுத்தி 5 இலட்சம் ரூபாய் பணத்தை மோச­டி­யாகப் பெற்­றுள்­ள­துடன், தாயி­ட­மி­ருந்த சுமார் 5 இலட்­சத்­திற்கும் அதிக பெறு­ம­தி­யு­டைய தங்கச் சங்­கி­லி­யையும் கொள்ளை­யிட்டு அடகு வைத்­து­விட்டு தாயையும், தந்­தை­யையும் வீட்டை விட்டு வெளி­யேற்­றிய மக­ளையும் மரு­ம­க­னையும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை கைது செய்­துள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சிலாபம் மைக்­குளம் பிர­தே­சத்­தி­லேயே இச்­சம்­பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்­கப்­பட்ட தாயும் தந்­தையும் சிலாபம் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமைய அவர்கள் மொன­ரா­கலை பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் என்றும், சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் தமது மகளை சிலாபம் மைக்­குளம் பிர­தே­சத்தைச் சேர்ந்த கைது செய்­யப்­பட்­டுள்ள நப­ருக்கு திரு­மணம் முடித்து கொடுத்து அவர்கள் சிலா­பத்­தி­லேயே வசித்து வந்­துள்­ள­தோடு திரு­ம­ணத்தின் பின்னர் சிலாபம் பிர­தே­சத்­திற்கே வந்து தம்­மோடு இருக்­கு­மாறும், காணி ஒன்றை வாங்கி வீடொன்றை நிர்­மா­ணித்துக் கொள்ள முடியும் என்றும் மகளும், மரு­ம­கனும் தம்மை அழைத்­ததால் தாமும் அதற்கு விருப்பம் தெரி­வித்­த­தா­கவும் அந்த முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பின்னர் மொன­ரா­கலை பிர­தே­சத்தில் தமது வீட்டை 35 இலட்சம் ரூபா­வுக்கு விற்­று­விட்டு சிலா­பத்­திற்கு தமது மகள் மரு­ம­க­னுடன் வாழ வந்­துள்­ள­தோடு, வீடு விற்ற பணத்தை சிலாபம் நக­ரி­லுள்ள அரச மற்றும் தனியார் வங்­கிகள் மூன்றில் வைப்புச் செய்­துள்­ளனர்.  பின்னர் சிலாபம் நகரில் தனியார் நிறு­வனம் ஒன்றில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ரா­கவும் தந்தை பணியில் இணைந்­துள்ளார்.

இவ்­வா­றான நிலையில் சில நாட்­க­ளுக்குப் பின்னர் மரு­மகன் தனது மனை­வி­யிடம் தெரி­வித்த யோச­னைக்கு அமைய மகள் தனது தாயி­னது வங்கி அட்­டைகள் மற்றும் அவற்றின் இர­க­சிய இலக்­கங்­க­ளையும் பெற்றுக்கொண்டு அவற்றைப் பயன்­ப­டுத்தி அவ்­வப்­போது ஐந்து இலட்சம் ரூபாய் பணத்தை மோச­டி­யாகப் பெற்றுக் கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதற்கு மேலாக தாயி­ட­மி­ருந்து சுமார் ஐந்து இலட்சம் ரூபா­வுக்கும் அதிக பெறு­ம­தி­யு­டைய தங்க சங்கிலியையும் எடுத்துச் சென்ற மகள் அதனை தனது கண­வ­ரிடம் கொடுத்து அடகு வைத்­துள்­ள­தா­கவும் அந்த முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தேவை ஒன்­றிற்­காக தாய் மக­ளிடம் தனது தங்க சங்கிலியைக் கேட்டபோது அதனை அவ­சரத் தேவைக்­காக அடகு வைத்­துள்­ள­தாக மகள் கூறி­யதை அடுத்து தனது மகள் மற்றும் மரு­மகன் மீது ஏற்­பட்ட சந்­தே­கத்தில் தாயும் தந்­தையும் தமது வங்கிக் கணக்கைப் பரீட்­சித்துப் பார்த்­துள்­ள­தோடு அவற்­றி­லி­ருந்து பணம் மீளப்­பெ­றப்­பட்­டி­ருப்­பதை அறிந்து கொண்­டுள்­ளனர்.

பின்னர் இது பற்றி கேட்­ட­போது அவர்­க­ளுக்­கி­டையில் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ள­துடன் மகளும், மரு­ம­கனும் சேர்ந்து தாய்க்கும் தந்­தைக்கும் மரண அச்­சு­றுத்தல் விடுத்து அவர்­களை வீட்டை விட்டு வெளி­யே­று­மாறும் அச்­சு­றுத்­தி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து அவர்கள் இரு­வரும் சிலாபம் பொலிஸ் நிலையம் சென்று பொலி­ஸாரின் தயவை நாடி­யுள்­ளனர். இந்த முறைப்­பாட்­டை­ய­டுத்து உடன் செயற்­பட்ட பொலிஸார் மகளையும், மருமகனையும் கைது செய்துள்ளதோடு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

சிலாபம் பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் செனரத் எதிரிசிங்க தலைமை யிலான குழுவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய் தந்தையின் முறைப்பாட்டில், மக­ளையும் மரு­ம­க­னையும் சிலாபம் பொலிஸார் கைது செய்த சம்பவம். தாய் தந்தையின் முறைப்பாட்டில், மக­ளையும் மரு­ம­க­னையும்  சிலாபம் பொலிஸார் கைது செய்த சம்பவம். Reviewed by Madawala News on February 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.