வெலிமடை ஆசிரியையின் 9 இலட்சம் ரூபாவுடன் கம்பி நீட்டிய பொறியியலாளர் மணமகனுக்கு போலீசார் வலை வீச்சு.


பொறியியலாளர் மணமகனை எதிர்பார்த்த ஆசிரியை ஒருவர் ஒன்பது இலட்ச ரூபா பணத்தைக் கொடுத்து
ஏமாந்த சம்பவமொன்று வெலிமடை, அம்பகஸ்தோவை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

வெலிமடை அரச பாடசாலை ஆசிரியை ஒருவரே பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டமை குறித்து, அம்பகஸ் தோவை பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை முறையிட் டுள்ளார்.

40 வயதான அந்த ஆசிரியை, ஒரு பொறியியலாளரைத் திருமணம் செய்வதே தனது இலக்கு என்று கூறி, தனது பெற்றோர் பார்த்த அனைத்து மாப்பிள்ளைகளையும் நிராகரித்து வந்துள்ளார்.


இதையடுத்து, பொறியியலாளர் மணமகனுக்கு, ஆசி ரியையான மணமகள் தேவை என்ற பத்திரிகை விளம்பரத்திற்கமைய தனது விண்ணப்பத்தை அனுப்பியுள்ளார்.

அதைத் தொடர்ந்து கடிதங்கள் பரிமாறப்பட்டதுடன், கையடக்கத் தொலைபேசி மூலமும் இருவரும் தொடர் புகளை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேரடியான சந்திப்புகளும் இடம்பெற்றன.


இச்சந்திப்புகளில் திருமணத்திற்கான தினமும் குறிப் பிடப்பட்டது. அந் நிலையில், மணமகன் குறிப்பிட்ட ஆசிரியையிடம் புதிய காரொன்று எடுக்க வேண்டி யுள்ளது. அதற்கு ஒன் பது இலட்சம் ரூபா - தேவையாகவுள்ள தென்று கூறவே, ஆசி ரியையும் குறிப்பிட்ட பணத் தொகையை வங்கியிலிருந்து பெற் றுக் கொடுத்துள்ளார்.


அப்பணத்தைப் பெற்ற பொறியிய லாளர் மணமகன், ஆசிரியையு டன் இருந்த அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண் டார். ஆசிரியை, பொறியியலாளர் மணமகனுடன் பல முறை தொடர்பு கொள்ள முயற் சித்தும், பயன் கிடைக் கவில்லை . தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவ்வாசிரியை, அம்பகஸ் தோவை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
வெலிமடை ஆசிரியையின் 9 இலட்சம் ரூபாவுடன் கம்பி நீட்டிய பொறியியலாளர் மணமகனுக்கு போலீசார் வலை வீச்சு. வெலிமடை  ஆசிரியையின் 9 இலட்சம் ரூபாவுடன் கம்பி நீட்டிய  பொறியியலாளர் மணமகனுக்கு போலீசார் வலை வீச்சு. Reviewed by Madawala News on February 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.