இந் நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களும் மிக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் அபிலாஷை.


–ஹஸ்பர் ஏ ஹலீம்–
" இந் நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களும் மிக சந்தோஷமாக இருக்க
 வேண்டும் என்பதே  எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் அபிலாஷை, அத்தோடு  இந்த நாட்டை ஒரு சுபிட்ஷமான நாடாக மாற்ற அமைக்க வேண்டும் என்ற எண்ணக்கருவோடும் இருக்கின்றார்". 
என வடமத்திய மாகாண ஆளூநர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.


 வட மத்திய ஆளூநர் திஸ்ஸ விதாரண திருகோணமலை மாவட்டத்திற்கு நேற்று முன்தினம்   (23) மாலை உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு திருகோணமலை,  கந்தளாய் , மற்றும் மூதூர் பகுதிகளுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.


>
> இதன் போது மூதூர் பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட வட மத்திய மாகாண ஆளுநர்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகளிர் அணியின் மூதூர் பிரதேசத்திற்கான தலைவி மஹ்றூப் - ரைஸா என்பவரின் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



> இந் நிகழ்வில் ஆளூநர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-  கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தறவில் சிறுபான்மையினரின் ஆதரவு எமக்கு  மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகின்றாக தெரிவித்ததுடன்.


> இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,  மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உங்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஏமாற்றுபவர்களுக்கு பின்னால் நீங்கள் சென்றால் அமெரிக்காவின் கயிற்றை விழுங்க வேண்டிய நிலை வரும்,
>
> ஆகவே நீங்கள் எதிர் வருகின்ற பொதுத் தேர்தலில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயோடு இணைந்து பொதுஜன பெரமுனையில் கேட்கின்ற உங்களுடைய உறுப்பினர்களை தெரிவு செய்ய நாட்டில் உள்ள அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .
>

> இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திருகோணமலை மாவட்டத்த்திற்கான செயலாளர் எம்.எம்.ஜவாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

--
Hasfar A Haleem BSW (Hons)
Journalist
இந் நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களும் மிக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் அபிலாஷை. இந் நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களும் மிக சந்தோஷமாக இருக்க  வேண்டும் என்பதே  எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் அபிலாஷை. Reviewed by Madawala News on January 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.