கிண்ணியா நகர சபையின் விசேட கூட்டத்தில் இடம்பெற்ற சலசலப்பு.


-ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா நகர சபையின் விசேட கூட்டமொன்று நேற்று  (21) மாலை கிண்ணியா நகர
சபையின் சபை ஒன்று கூடல் மண்டபத்தில் குறித்த சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இடம் பெற்றது.


ஆரம்பத்தில் இறை வணக்கத்துடன் ஆரம்பிக்க இருந்த இக் கூட்டம் சபையின் உறுப்பினர் எம்.எம்.மஹ்தி அவர்களால் செயலாளர் ஒருவர் இங்கு இல்லை இதனால் இக் கூட்டம் செல்லுபடியாகாது என அவருடன் இணைந்து மேலும் உறுப்பினர்களான கலிபத்துல்லா;நிவாஸ்,உமர் ரலி ரனீஸ் உள்ளிட்டோர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள். சபையின் பதில் செயலாளராக கடமையாற்றி வந்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் அலுவலக உத்தியோகத்தரான றியாஸ் என்பவரை இடமாற்ற எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் இரு குழுக்கள் இன்றைய தினம் சல சலப்பில் ஈடுபட்டார்கள் குறித்த சபையில் தவிசாளர் உட்பட 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கிறார்கள்.


 சபை அமர்வில் ஒன்பது உறுப்பினர்கள் சமூகமளித்திருந்த நிலையில் தவிசாளர் தலைமையில் ஒரு குழுவினரும் உறுப்பினர் மஹ்தி தலைமையில் இன்னுமொரு குழுவினரும் இதன் போது கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள்.

தவிசாளர் தலைமையிலான குழுவினர் பதில் செயலாளர் தேவையில்லை என்றும் மற்றுமொரு குழுவினர் பதில் செயலாளராக உரியவர் தேவை எனவும் இங்கு தெரிவித்தனர்.

இது தொடர்பில் சபை நடவடிக்கையின் விசேட கூட்டம் முடிவடைந்ததன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த 
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் ..., 

சபையில் பதில் செயலாளராக கடமையாற்றி வந்த குறித்த நபர் ஒரு சில உறுப்பினர்களுக்கு மாத்திரம் சாதகமாக செயற்படுகிறார் சபையின் தவிசாளருக்கு ஒத்துழைப்புக்கள் வழங்குவதில்லை இதனால் மூன்று உறுப்பினர்களை தவிர ஏனைய கௌரவ சக உறுப்பினர்கள் என்னுடன் இருக்கிறார்கள் சகல திட்டங்களையும் உரியவாறு நடாத்தி வருகிறோம் பல்வேறு திட்டங்களையும் நடாத்தவுள்ளோம் இதற்காக அனைவரதும் ஒத்துழைப்புக்கள் தேவை ஊழல் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக என் மீது சமூக வலைத்தளங்கள் ஊடாக சிலர் சேறு பூசுகிறார்கள்..

அப்படி இருந்தால் பொது மக்களோ,இங்கிருக்கும் உறுப்பினர்களோ உரிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கோ இல்லாது போனால் உரிய அரச திணைக்களங்களுக்கோ அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் வெறுமென இல்லாத பொல்லாத குற்றச் சாட்டுக்களை முன்வைக்காதீர்கள் நாங்கள் கிண்ணியாவை அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்ல இருக்கிறோம்.சரியான விடயங்களை முன்வைக்கவே இவ் விசேட கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.

கட்சி பேதமின்றி அபிவிருத்திக்கும் சபையின் சகல திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வரும் உறுப்பினர்களை குழப்ப நிலைக்கு சிலர் முரண்பாடுகளுக்குள் காட்டி ஊடகங்களுக்கு சூழ்ச்சிக்காரர்களாக காட்ட முனைகிறார்கள் என்றார்.

உரிய செயலாளர் மீண்டும் உரியவரே தேவை இது தொடர்பில் சபையின் உறுப்பினரான எம்.எம்.மஹ்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

சபையின் விசேட கூட்டம் நடாத்தும் போது செயலாளர் இன்மை காரணமாக இக் கூட்டம் சட்ட ரீதியற்றது செல்லுபடியாகாது உரியவாறு செயலாளர் நிரந்தரமாக நியமிக்காத வரை சட்டரீதியான இம் மாத சபை அமர்வு கூட இடம் பெறமாட்டாது இதற்காக ஒத்துழைப்பு வழங்க முடியாது குறித்த பதில் செயலாளராக கடமையாற்றி வந்தவர் சிறப்பாக செயற்பட்டவர் நல்ல பல விடயங்களுக்காக கிண்ணியா பிரதேசத்தின் அபிவிருத்திக்காக செயற்பட்டவர் இவரை இடமாற்ற நினைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
சபையில் வரிப்பணமாக மக்களால் செலுத்தப்படுகிறது இதற்காக மக்களுக்கு வகை சொல்ல வேண்டியவர்களாக சக உறுப்பினர்களாக நாம் உள்ளோம்.

வேறு யாரேனும் தகுதியான நிரந்தர செயலாளரையாவது நியமிக்கும் வரை எந்தவித கூட்டங்களோ செல்லுபடியாகாது என்றார்.
கிண்ணியா நகர சபையின் விசேட கூட்டத்தில் இடம்பெற்ற சலசலப்பு. கிண்ணியா நகர சபையின் விசேட கூட்டத்தில் இடம்பெற்ற சலசலப்பு. Reviewed by Madawala News on January 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.