முன்னபள்ளி பாடசாலைகளில் சீ.சீ.ரி.வி.கண்கானிப்பு கமராக்களின் தேவை மிக முக்கியமாகும்..



முன்பள்ளி பாடசாலைகளின் தேவையும் அதனுடைய நிர்மாணங்களும் அதிகரித்து காணப்படுகின்ற ஒரு
காலகட்டத்தில் எமது சமூகம் வாழ்ந்து கொண்டிருகின்றது. அந்த அடிப்படையில் அரச பாடசலையில் சேர்ப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்னரே எமது செல்லப்பிள்ளைகளை முன்பள்ளி பாடசாலைகளில் நாம் சேர்த்து விடுகின்றோம்.

வீட்டிலே பெற்றோர் மற்றும் உறவினரின் பாதுகாப்பிலும், அவர்களுடைய அரவணைப்பிலும் விளையாட்டு பிள்ளைகளாக இருக்க கூடியவர்கள் அடைக்கப்பட்ட ஒரு இடத்தில் புதிய எஜமானராக திடீரென காட்டப்படும் ஒருவரின் கட்டுப்பாடில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை ஏதோ ஒருவகையான பெற்றோரின் வற்புறுத்தலின் விளைவால் முடக்கப்படுகின்ற்றார்கல் எமது பிள்ளைகள்.

இவ்வாறான நிலைமையும், முன்பள்ளி சூழல்களும் அதிகளவான பிள்ளைகளுக்கு மன உளைச்சலையும், அதிகப்படிய உள ரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமல்லாமல் வீட்டிலே செல்லப்பிள்ளைகளாய் விளையாட வேண்டியவகளை உரிமையுடம் தாயிடம் கூறுவதற்கு துணிபவர்கள் அங்கே ஏதோ ஒரு வகையால் ஏற்ப்பட்ட பயத்தினால் வெளிப்படையாக செயற்படகூடிய எமது சிறார்கள் மெளனமாகின்றனர்.

அத்தோடு ஒரு ஐந்து வயது பிள்ளையின் சுட்டித்தனத்தினை எமது தாய்மார்களுக்கு சமாலிப்பது என்பது ஒரு சாதனையாக இருக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு முன்பள்ளி ஆசிரியையினால் எவ்வாறு 30க்கும் அதிகமான பிள்ளைகளின் சுட்டித்தனங்களை சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேல் சமாலிக்க முடியும்.? என்பதே இங்கு எழுகின்ற மிகப்பெரிய கேள்வியாகும்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டும் ஆசிரியைகள் கூட ஒரு நிலையில் எமது செல்லப்பிள்ளைகளை எவரிடமும் கூறுவதற்கு தயங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் கடிணமாக தண்டிப்பதற்கும் தயங்குவதில்லை. இவ்வாறான நேரத்தில் எமது பிள்ளைகளுக்கு கல்வியின் ஆரம்பமே கசப்பான ஒரு விடயமாக மாறிவிட வாய்ப்புள்ளது. சில நேரங்களில் ஆசிரியை மீது இருக்கும் பயத்தினால் தாயிடமும் கூற முடியாத எமது அன்புச்செல்வங்கள் மன உளைச்சல்களுக்கு ஆளாகிய சந்தர்ப்பங்களையும், காணொளியுடன் சேர்ந்த செய்திகளையும் நாளந்தம் நாம் சமூக வலைத்தளக்களில் பார்வையிட கிடைக்கின்றது.

இதனால் முன்பள்ளிகளின் தேவைப்பாட்டினை நாம் குறைத்தும் மதிப்பிட முடியாது. ஆகவே எமது செல்லப்பிள்ளைகளை முன்பள்ளிகளில் நாம் சேர்க்கின்ற பொழுது அவர்களுக்கு அங்கே சிறந்த பாதுகாப்பு இருகின்றதா.? அவர்களை நாம் விட்டுச்சென்றவுடன் எவ்வாறு அவர்களுடன் ஆசிரியைகள் நடந்து கொள்கின்றார்கள்.? அங்கே எமது பிள்ளைகளின் நடத்தைகளை எவ்வாறு காணப்படுகின்றது.? ஏனைய பிள்ளைகளுடன் எமது பிள்ளைகள் எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள்.?

எமது வீட்டு பழக்கவளக்கங்களுக்கு பழக்கப்பட்ட எமது அன்புசெல்வங்களின் நடத்தைகள் அங்கே எவ்வாறு இருக்கின்றது.? கற்பித்தலை தாண்டி முன்பள்ளியின் தேவை எமது பிள்ளைகளின் எதிர்கால செயற்பாடுகளில் எவ்வாறான நன்மையான விடயங்களாகவும், அடித்தளமாகவும் அமைய போகின்றது.? பிள்ளைகளுக்கு  திடீர் தேவையாக உள்ள மலம், சிறு நீர் கழிப்பது போன்ற விடயங்களில் தேவைகள் ஏற்படின் அதனை எவ்வாறான முறையில் பொறுப்பில் உள்ள ஆசிரியைகள் கையாளுகின்றனர்.? போன்ற விடயங்களை பெற்றோர்கள் முக்கிய கவனத்தில் எடுத்து செயற்படுவது மிக கண்டிப்பான தேவையாகும்.

அந்த வகையில் நவீன காலத்தில் முழு உலகையும் சிமார்ட் போனூடாக கையில்  வைத்திருக்கும் நாம், எமது பிள்ளைகளை முன் பள்ளியில் சேர்த்துவிடுகின்ற பொழுது வகுப்பறையிலும், வகுப்பறையினை சுற்றிய பிரதேசங்களிலும் குறித்த முன்பள்ளி பாடசாலையில்   சீ.சீ.ரி.வி.கண்கானிப்பு கமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதா என்பதனை அலசி ஆராய்ந்து அதன் பின்னர் முடிவெடுப்பதே இக்காலத்துக்கு பொருத்தமானது என்பதுடன் எமது செல்லப்பிள்ளைகளின் நிம்மதியான எதிர்கால வாழ்க்கைக்கும் பாதுகாப்பானது என்பதே உண்மை.

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
முன்னபள்ளி பாடசாலைகளில் சீ.சீ.ரி.வி.கண்கானிப்பு கமராக்களின் தேவை மிக முக்கியமாகும்.. முன்னபள்ளி பாடசாலைகளில் சீ.சீ.ரி.வி.கண்கானிப்பு கமராக்களின் தேவை மிக முக்கியமாகும்.. Reviewed by Madawala News on January 08, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.