திருமலையில் கடும் மழை காரணமாக வயல் நிலங்கள் போக்குவரத்து என பல பாதிப்புக்கள்.


-ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா தம்டலகாமம் பிரதான வீதியின் தம்பலகாமத்தையும்
கிண்ணியாவையும் இணைக்கும் சிவத்தப்பாலத்தடி வீதியில் போக்குவரத்து செய்ய முடியாமல் அதிக மழை நீர் வடிந்தோடுவதை காணக்கூடியதாகவுள்ளது. கடும் மழை காரணமாக இப் பகுதியில் உள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது குறிப்பாக இவ்வீதியூடாக பயணிப்போர் அவதானத்துடன் செல்லுமாறும் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
அடை மழை காரணமாக தம்பலகாம பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன தம்பலகாம கோயிலை அண்டிய பகுதியில் உள்ள வயல் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன வெள்ள நீர் முழுமையாக வயல் நிலங்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


திருகோணமலையில் உள்ள ஏனைய 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பாதிப்புக்கள் இடம் பெற்றுள்ளதையும் இதனை கட்டுப்படுத்தவும் தாங்கள் 24 மணி நேரம் தயார் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் சுகுனதாஸ் தெரிவித்தார்.

வெருகல் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக முகாம் ஒன்றினையும் அமைத்து மக்களை பாதுகாப்பு இடங்களில் தங்கவைக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

திருமலையில் கடும் மழை காரணமாக வயல் நிலங்கள் போக்குவரத்து என பல பாதிப்புக்கள். திருமலையில் கடும் மழை காரணமாக வயல் நிலங்கள் போக்குவரத்து என பல பாதிப்புக்கள். Reviewed by Madawala News on December 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.