10 கிலோ தங்க கடத்தல் முறியடிப்பு... விமான பயணியும், அவருக்கு சூட்சுமமாக உதவிய Duty free shop ஊழியரும் கைது.


சட்டவிரோதமாக 10 கிலோ கிராம் (10.844kg) தங்கத்தை கடத்த முயன்ற அவுஸ்திரேலிய பயணி ஒருவரும்,
அவருக்கு உதவிய தீர்வை வரி விலக்களிப்பு வர்த்தக நிலைய (Duty free shop) ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (11) முற்பகல் 11.30 மணிக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வந்து UL307 எனும் சிங்கப்பூரிலிருந்து வந்த விமானம் மூலம் இலங்கை வந்த 46 வயதானவர் என சுங்கத் திணைக்கள அத்தியட்சகர் லால் வீரகோன் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர், விமான நிலைய தீர்வை விலக்கு வர்த்தக நிலையமொன்றுக்கு சென்று, அங்கு மின்விசிறி பெட்டியொன்றை கொள்வனவு செய்துள்ளதோடு, அதில் குறித்த தங்க பிஸ்கட்டுகளை வைத்து வெளியில் கொண்டு வர உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, 39 வயதான குறித்த வர்த்தக நிலைய ஊழியர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (PNB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த பெட்டியில் சுமார் 100 கிராம் நிறை கொண்ட 99 தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, அவை 5 பிஸ்கட்டுகளாக கறுப்பு உறையினால் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.

குறித்த பயணி, குருணாகலைச் சேர்ந்த சிவில் பொறியியலாளர் என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் சந்தேகநபர்கள் சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க சுங்கப் பிரிவு மேற்கொண்டுள்ளது.
10 கிலோ தங்க கடத்தல் முறியடிப்பு... விமான பயணியும், அவருக்கு சூட்சுமமாக உதவிய Duty free shop ஊழியரும் கைது. 10 கிலோ தங்க கடத்தல் முறியடிப்பு... விமான  பயணியும், அவருக்கு சூட்சுமமாக உதவிய Duty free shop ஊழியரும் கைது. Reviewed by Madawala News on December 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.