பாபர் மஸ்ஜிதுக்கு எதிரான தீர்பை உலக முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.




இந்திய முஸ்லிம்களின் பூர்வீக பூமியான பாபர் மஸ்ஜிதை கோவில் இடமாக அறிவித்து நீதியை
குப்பையில் வீசியெறிந்துள்ளது இந்திய உச்ச நீதி மன்றம்.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ கடும் கண்டனம்.

இந்தியாவின் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மஸ்ஜித் என்ற முஸ்லிம்களின் 500 வருட பழைமை வாய்ந்த பள்ளிவாயலை 1992 டிசம்பர் 6ம் திகதி “கர சேவை” என்ற முழக்கமிட்டு அப்போதைய இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல்.கே அத்வானி தலைமையிலான குழு உடைத்தது. 

பாபர் மஸ்ஜித் என்பது இராமர் பிறந்த இடம் “இராம ஜென்ம பூமி” அது முஸ்லிம்களிடம் இருப்பதை ஒப்புக் கொள்ள முடியாது என்பதே பள்ளியை அவர்கள் உடைப்பதற்கு காரணமாக அமைந்தது. 

உண்மையில் பாபர் மஸ்ஜித் என்பது 500 வருடங்கள் பழைமை வாய்ந்த முஸ்லிம்களின் பூர்வீக சொத்தாகும். அரசியல் உள்நோக்கத்துடன் ஆட்சியை பிடித்துக் கொள்வதற்காக அப்பாவி மக்களை மதத்தின் பெயரால் தூண்டி விட்டு பாபர் பள்ளி வளாகத்தை இராமர் கோவில் வளாகம் என்று வதந்தியை உண்டாக்கி கலவரங்களை தூண்டியது பாரதிய ஜனதா கட்சி. 

இதன் தொடராகவே பாபர் மஸ்ஜித் உடைக்கப்பட்டது. 

பாபர் மஸ்ஜித் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை சர்வதேச கவனத்தை பெற்றது.

பாபர் மஸ்ஜிதை மீட்க்கும் வகையில் ஒவ்வொரு டிசம்பர் மாதம் 06ம் திகதியும் முஸ்லிம்கள் பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டத்தை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில் தான் பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்கின் இறுதித் தீர்வை இந்திய உச்ச நீதி மன்றம் இன்று வெளியிட்டுள்ளது.

இந்திய உச்ச நீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பில் 

 ‘பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்குறியது” என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். இதற்காக புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் இந்திய மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்' எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

இந்த தீர்ப்பு ஒருதலைப்பட்சமான நீதியை குழிதோண்டிப் புகைக்கும் அநியாய தீர்ப்பு மாத்திரமன்றி இந்திய மண்ணில் நீதியை நேசித்து, நீதி மன்றங்களை மதிக்கும் முஸ்லிம்களின் நெஞ்சில் குத்தும் தீர்ப்பும் ஆகும்.

பாபர் மஸ்ஜித் என்பது 500 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் தொழுகை நடத்திய இடம். அந்த இடத்தை உடைத்து அபகரித்தவர்கள் இடம் எங்களுக்குறியது என வாதாடினால் அது அவர்களுக்கு உரியது என நீதி மன்றம் எப்படி தீர்ப்பும் வழங்க முடியும்?

முஸ்லிம்கள் தரப்பில் இடம் தங்களுக்குறியது என்பதற்கு ஆதாரம் காட்ட வில்லை என்று கூறும் இந்திய உச்ச நீதி மன்றம் பாபர் மஸ்ஜித் இருந்த இடம் இராமர் கோவில் வளாகம் தான் என்பதை எப்படி உறுதிப்படுத்தியது? அதற்கு என்ன ஆதாரத்தை இந்துக்கள் தரப்பில் முன்வைத்தார்கள்? எந்தவொரு ஆதாரமும் முன்வைக்காத ஒரு தரப்புக்கு பள்ளியை எப்படி கோவில் என்று மாற்றி தீர்ப்பளிக்க முடியும்?

*பாபர் பள்ளி இருக்கும் இடத்தில் இராமர் கோவில் இருந்ததா?*

‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார் என்றே இந்திய ப.ஜ.க வாதிடுகிறது இந்த வாதத்தில் உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.

இந்த இராமர் கோவிலை விக்கிரமாதித்த மன்னர் கட்டினார் என்று இந்து ஆதரவாளர்கள் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திரகுப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.

அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.

குப்த மன்னர்கள் இந்தியாவின் உ.பி.யில் சில பகுதிகளை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படுகின்றனர்.

கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல்பொருள் இலாகாவின் தலைவர் பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வறிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) பத்திரிக்கையிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 - 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.

‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்ற சாதாரண சிந்தனையிலாவது இந்திய உயர் நீதி மன்ற நீதிபதிகள் இந்த பிரச்சினையை அனுகியிருந்தால் அதற்கு நீதியான தீர்ப்பும் வழங்கியிருக்கலாம். 

தங்கள் மத சிந்தனை அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதினால் தான் இடத்திற்கு சொந்தக் காரர்களாக முஸ்லிம்களிடமிருந்து பாபர் மஸ்ஜித் இன்று அபகரிக்கப்பட்டுள்ளது.

*பாபர் மஸ்ஜித் தொடர்பான இன்றைய இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மனசாட்சியுள்ள எந்தவொரு மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதுடன், இந்திய உச்ச நீதிமன்றத்தின் இந்த அநியாய தீர்ப்பை இலங்கை முஸ்லிம்கள் சார்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ வன்மையாக கண்டிக்கிறது.*

R. அப்துர் ராசிக் B.Com
பொதுச் செயலாளர், 
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ
பாபர் மஸ்ஜிதுக்கு எதிரான தீர்பை உலக முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாபர் மஸ்ஜிதுக்கு எதிரான தீர்பை  உலக முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். Reviewed by Madawala News on November 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.