மக்களை ஏமாற்றுவதற்கு கிழிந்த செருப்பை அணிபவர்களைப் போல எனக்கு வறுமை என்பது ஒரு Fashion அல்ல!!



எனது தந்தை அரசாங்கத்தில் ஒரு தொழிலாளி. அம்மாவுக்கு எழுதப் படிக்க
தெரியாது. எமக்கு கல்வியை வழங்கவும் எமது பசியை தீர்க்கவும் அவர்கள் பட்ட கஷ்டத்தை நான் கண்கூடாக கண்டவன். அவர்களின் ஆதாயம் எமது கல்விச் செலவிற்கு போதுமானதாக இருக்கவில்லை. அதனால் விடுமுறை நாட்களில் நாங்கள் ரயிலில் மாம்பழம் விற்போம். டொபி, சிகரெட் விற்போம். மகாவலி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நானும் எனது நண்பர்களும் புதிதாக அமைக்கப்படும் பாதைகளில் காண் வெட்டச் செல்வோம். அதற்கு எமக்கு கிடைத்த சம்பளம் 20 ரூபாய்.

ஆனால் எனது நண்பர்கள் அனைவராலும் கல்வியை தொடர முடியவில்லை. அது படிக்க முடியாததால் அல்ல. படிப்பதற்கான வாய்ப்பை அவர்களது வறுமை பறித்துவிட்டது. சிலர் குடிபோதைக்கு அடிமையாகி சிறு வயதிலேயே அநியாயமாக உயிரை இழந்தனர். சிலரது மனைவிகள் வெளிநாட்டிற்கு தொழில் தேடிச் சென்று அவர்களது குடும்பமே சின்னாபின்னமானது. வறுமை எங்கள் சமுதாயத்தில் பலரது வாழ்க்கையை சூறையாடிவிட்டது.

அவ்வாறு ஏழை எளிய மக்களில் ஒருவனாக அடிமட்டத்தில் இருந்த வந்த எனக்கு, ஜனாதிபதியாக சகோதரரையோ தந்தையையோ கொண்டிருந்த, சமூகத்தில் பெரும் அந்தஸ்தை பெற்ற, கொழும்பில் பிரதான பள்ளிகளில் படித்த, மாளிகைகளில் பிறந்து வளர்ந்த வேட்பாளர்களுடன் இன்று சரிசமமாக மோதக்கூடிய சக்தியும் திறமையும் கிடைத்திருப்பதையிட்டு நான் தன்னடக்கமாக பெருமை கொள்கின்றேன்.

அதற்கு காரணம் என்னோடு கைகோர்த்து என்னை வழிகாட்டிய பாட்டாளி வர்க்க ஏழை எளிய மக்களே! அவர்களின் வலியை நன்றாக உணர்ந்தவன் நான். சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மக்களை ஏமாற்றுவதற்கு கிழிந்த செருப்பை அணிபவர்களைப் போல எனக்கு வறுமை என்பது ஒரு Fashion  அல்ல!

நசுக்கப்படும் வறிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டிய ஒரு கடமை எமக்கு உள்ளது. அதற்காக தான் நாம் அரசியல் செய்கின்றோம். இந்த மக்களுக்காக எம்மால் முடிந்த சேவையை செய்தோம் என்ற நிம்மதியே எமக்கு போதுமானது!

- அனுர குமார திசாநாயக்க
மக்களை ஏமாற்றுவதற்கு கிழிந்த செருப்பை அணிபவர்களைப் போல எனக்கு வறுமை என்பது ஒரு Fashion அல்ல!! மக்களை ஏமாற்றுவதற்கு கிழிந்த செருப்பை அணிபவர்களைப் போல எனக்கு வறுமை என்பது ஒரு Fashion அல்ல!! Reviewed by Madawala News on November 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.