கட்சியின் தலைமையகத்தினை முற்றுகையிட்டு கைப்பற்ற யோசனை.


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க 
குமாரதுங்க இன்று வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புகிறார்.


சுதந்திரக் கட்சி – வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ள சந்திரிகா ,நாடு திரும்பிய கையோடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் பலரை சந்தித்துப் பேசவுள்ளார்.


அதேசமயம் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்க விரும்பாத கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களை கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தினை முற்றுகையிட்டு கைப்பற்றவும் யோசனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.


இதற்கிடையில் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் உரிய அனுமதியில்லாத எவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாமெனவும் இப்போதைய கட்சித் தலைமையால் உத்தரவிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

சிவா ராமசாமி
கட்சியின் தலைமையகத்தினை முற்றுகையிட்டு கைப்பற்ற யோசனை. கட்சியின் தலைமையகத்தினை முற்றுகையிட்டு கைப்பற்ற யோசனை. Reviewed by Madawala News on October 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.