ஊடகங்கள் ஒரு வாரத்திற்கு கண்காணிக்கப்படும்... தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பில் தவறாக செயற்படுபவர்களுக்கு தண்டனை.


அரச மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் தாம் விரும்பும் கட்சிகளுக்கு சார்பாக பொதுமக்களை திசை
திருப்பும் தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.


இது தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 19 வது அரசியல் திருத்த சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.


இன்று முதல் ஒரு வார காலம் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் செய்திகள் உட்பட ஊடகங்களின் செயற்பாடுகள் கண்காணிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


தன்னிச்சையாக செயற்படும் ஊடகங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, மூன்று வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் அறிவிடப்படும் என எச்சரித்துள்ளார்.


இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்ரிய இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.


மேலும், ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகளை நவம்பர் 17ஆம் திகதியன்று எதிர்பார்க்க முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.


ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் 35 பேர் போட்டியிடுவதால் இறுதி முடிவுகள் தாமதமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.


எனவே, இறுதிமுடிவு நவம்பர் 18ஆம் திகதியன்றே வெளியாகும் என்றும் தேசப்பிரிய கூறினார்.
2019 ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகங்கள் ஒரு வாரத்திற்கு கண்காணிக்கப்படும்... தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பில் தவறாக செயற்படுபவர்களுக்கு தண்டனை. ஊடகங்கள் ஒரு வாரத்திற்கு கண்காணிக்கப்படும்...  தேர்தல்  பிரச்சாரங்கள் தொடர்பில் தவறாக  செயற்படுபவர்களுக்கு தண்டனை. Reviewed by Madawala News on October 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.