ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளைய தினம் முன்னிலையாக முடியாது.


அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்
நாளைய தினம் (18) தனக்கு முன்னிலையாக முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சில நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதால் தனக்கு நாளைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என பிரதமர் அறிவித்துள்ளார்.

மத்தல விமான நிலையத்தினுள் நெல் களஞ்சியப்படுத்தியதன் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாளைய தினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு இன்றைய தினம் (17) எழுத்து மூலம் அவருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சர் தயா கமகே நாளைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

அதற்கு மேலதிகமாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளைய தினம் முன்னிலையாக முடியாது. ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளைய தினம்  முன்னிலையாக முடியாது. Reviewed by Madawala News on October 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.