பாடசாலைகளுக்கான 1000 எலெக்ட்ரோனிக் பாடங்களைத் (e-Teaching Lessons) தயாரித்து அக்குரனை யகீன் சாதனை .


கண்டி, அம்பதன்னை  யகீன் எடியூகேசன் சிஸ்டம்ஸ் நிறுவனம் பாடசாலைகளில்
பயன்படுத்தக்கூடிய 1000 எலெக்ட்ரோனிக் பாடங்களைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளது.


இன்று உலகெங்கும் உள்ள நவீனமான பாடசாலைகளில் பின்பற்றப்படும் ஈ-லேனிங் கற்ப்பித்தல் முறைகளுக்கான 1000 எலெக்ட்ரோனிக் பாடங்கள் இலங்கை அரச பாடத் திட்டத்தின் கீழ் விஞ்ஞானம், புவியியல், வரலாறு மற்றும் முயற்சியாண்மைக் கல்வி ஆகிய பாடங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இப்பாடங்கள் யாவும் துறை சார்ந்த மற்றும் முது கலைப் பட்டம் (MASTERS DEGREE) பெற்ற அனுபவமிக்க ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. ஈ - லேனிங் பாடங்களைத் தயாரிப்பதற்கான நவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொழிநுட்ப ஆய்வுகூடம் இந்நிறுவனத்தின் பெண்கள் பாடசாலையான நிஸ்வான் மொடல் ஸ்கூலில் அமைந்துள்ளது.


 யகீன் எடியூகேசன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் கீழ் தற்போது யகீன் மொடல் ஸ்கூல், நிஸ்வான் மொடல் ஸ்கூல் ஆகிய சர்வதேச பாடசாலைகள் இயங்குகின்றன. இந்த எலெக்ட்ரோனிக் பாடங்கள் (e-Learning Lessons) இப்பாடசாலைகளின் ஆறாம் தரம் முதல் பதினோராம் தரம் வரையான வகுப்புக்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் படுகின்றன.


ஈ- லேனிங் மூலமாக பாடங்களைக் கற்பது இலகுவானதும் மற்றும் பாரம்பரிய கற்றல் கற்பித்தல்  முறைகளை விட வினைத்திறன் மிக்க கூடியதுமாகும். இதன் மூலமாக மாணாக்கருக்கு அவர்களது பாடங்கள் சம்பந்தமான மேம்படுத்தப்பட்ட உள்ளடக்கங்கள் (Enriched Contents) சிறப்பாக வழங்கப்படுகின்றன. கற்றல் பொறிமுறையில் ஆர்வம் குறைந்த மாணவ மாணவியரும் ஊக்கமடைந்து அதில் ஆர்வம் செலுத்த ஆரம்பிக்கின்றனர்.


கல்வித் துறையில் இன்று உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பரீதியான முன்னேற்றங்களைக் காலதாமதமின்றி அறிமுகம் செய்து சவால் நிறைந்த எதிர்காலத்திற்காக அவர்களைத் தயார் செய்வது காலத்தின் முக்கிய தேவையாகும், அத்துடன் நவீன கல்வி சார் தொழில்நுட்பம் சம்பந்தமான ஆர்வமுள்ள அரச பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள் இந்தக் கற்பித்தல் முறைகளை பார்வையிடவும் எதிர்காலத்தில்  வாய்ப்பு வழங்கப்படும்  என நிறுவனத்தின் தலைவர் பஹ்மி பாரூக் எமது இணையத் தளத்திடம் தெரிவித்தார்.


தற்போது இலங்கையில் இரண்டாம் நிலை வகுப்புக்கள் (Secondary Classes) அனைத்திலும் TAB மூலமாகக் கல்வி கற்பிக்கப்படும் பாடசாலைகள் யகீன் மொடல் ஸ்கூல் மற்றும் நிஸ்வான் மொடல் ஸ்கூல் ஆகியன மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது. 
பாடசாலைகளுக்கான 1000 எலெக்ட்ரோனிக் பாடங்களைத் (e-Teaching Lessons) தயாரித்து அக்குரனை யகீன் சாதனை . பாடசாலைகளுக்கான 1000 எலெக்ட்ரோனிக் பாடங்களைத் (e-Teaching Lessons) தயாரித்து அக்குரனை யகீன்  சாதனை . Reviewed by Madawala News on October 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.