தொண்டமானும், திகாம்பரமும் அமைச்சர் மனோவிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்!


“ தொண்டமானும், திகாரம்பரமும் அமைச்சர் மனோ கணேசனிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.”
என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ விதி ஆயிரம் கதவுகளை மூடினாலும், விடா முயற்சி இருப்பின் ஒரு ஜன்னலேனும் நிச்சயம் திறக்கப்படும்.  இப்படிதான் தனது விடா முயற்சியாலும், வீறுநடைபோடும் தலைமைத்துவத்தாலும் மலையக மக்களுக்கு பல உரிமைகளை வென்றுக்கொடுத்துள்ளார் எங்கள் தலைவர் கௌரவ மனோ கணேசன் அவர்கள்.

அமைச்சரவையிலும், அதிஉயர் சபையிலும் எவருக்கும் அடிபணியாது மக்களின் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்பும் எங்கள் தலைவர், பொதுவெளியில் அவற்றை முதலீடு செய்து அரசியலில் ‘வாக்கு’ அறுவடை செய்வதற்கு முற்படுவதில்லை.

இதனால்தான் இன்றும் அவர் தன்மானத் தமிழனாகவும், தலைவராகவும் வலம்வருகின்றார்.

மலையக அபிவிருத்தி அதிகார சபை, புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கம், பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் என உரிகைளை வென்றெடுப்பதற்காக சவால்களுக்கு மத்தியிலும் சளைக்காமல் தலைமைத்துவத்தை வழங்கினார். இதனால்தான் குறுகிய காலப்பகுதிலேயே வெற்றிக் கூட்டணியாக தமிழ் முற்போக்கு கூட்டணி வலம் வருகின்றது.

தலைவரின் வழியில் அரசியல் நடத்தினால் பேரும், புகழும் எம்மைதேடிவரும். அவற்றின் பின்னால் நாம் ஓடவேண்டியதில்லை.

மலையகத்தில் இன்று ‘காபட்’ பாதைக்கு உரிமை கொண்டாடும் அரசியல் நடத்தப்பட்டுவருகின்றது.

இலங்கை அரசியல் கலாசாரத்தில் பல மாற்றங்கள் நடந்துவருகின்றன. ஆனால், நுவரெலியா மாவட்டத்தில் தொண்டா, திகா அணிகளுக்கிடையில் இடம்பெறும் சம்பவங்களானவை மலையக அரசியல் இன்னும் அதே நிலையில்தான் இருக்கின்றது என தென்னிலங்கை அரசியல் வாதிகள் கைகொட்டி சிரிக்கின்றனர்.

எனவே, மலையக மக்களை அவமானப்படுத்தும் வகையில் அரசியல் நடத்தாமல், தன்மானத்துடன் எவ்வாறு அரசியல் நடத்துவது என்ற பாடத்தை எங்கள் தலைவரிடமிருந்து தொண்டமானும், திகாம்பரமும் கற்றுக்கொள்ளவேண்டும்.” என்றார் வேலுகுமார் எம்.பி.
தொண்டமானும், திகாம்பரமும் அமைச்சர் மனோவிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்! தொண்டமானும், திகாம்பரமும் அமைச்சர் மனோவிடமிருந்து  பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்! Reviewed by Madawala News on July 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.