“மேன் ஒப் த மோமண்ட் “ ஹரீஸ் ..



இலங்கை அரசியல் வரலாற்றில், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரேசமயத்தில் பதவி துறந்து,
தமக்கு சமூகம்தான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளனர்.

அந்தவைகயில் முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒரே கொள்கையில் திரளச்செய்வதில், பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முக்கிய பங்காற்றியுள்ளார்.

ரத்தன தேரரின் உண்ணாவிரதம் உச்சத்தை அடைந்த போது முன்னாள் அமைச்சர் ரிஷாதை தேடிச்சென்ற ஹரீஸ் “ நிலமை மோசமடைந்துள்ளது  தேரருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது ஞானசார தேரரும் அரசுக்கு காலக்கெடு கொடுத்துள்ளார்.நிலமையை  தணிக்க  நாம் ஒரு படி கீழே இறங்க வேண்டும். உங்களை தனிமைப்படுத்த நாம் விடமாட்டோம்.” என குறிப்பிட்டுள்ளதாக அறியமுடிகிறது.

குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒரே கொள்கையில் திரளச் செய்வதிலும், பிரதான முஸ்லிம் தலைவர்களிடையே தூதுகளை சுமந்து செல்வதிலும், கட்சி பேதம் பார்க்காது ஹரீஸ் பங்களித்துள்ளார்.

கடந்த வாரம் ஒருசந்தர்ப்பத்தில் மாற்று முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவரின் வீட்டிக்குகூடச் சென்று ஒற்றுமை குறித்த பேச்சுக்களிலும், ஒரே தீர்மானத்தில் எடுத்து அதனடிப்படையில் பயணிக்க வேண்டுமென வலியுறுத்தியதாகவும் அறிய வருகிறது.

ஆரம்பத்தில் றிசாத் பதியுதீன் ஆசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் மாத்திரதே பதவி விலகி ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சகலரும் பதவி துறப்பதுதான் சிறந்தது என வாதிட்டு அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளதை அடுத்தே அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் பதவிகளை துறப்பது என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்  இந்த விடயத்தில் “மேன் ஒப் த மூவ்மண்ட்” ஆக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“மேன் ஒப் த மோமண்ட் “ ஹரீஸ் .. “மேன் ஒப் த மோமண்ட் “ ஹரீஸ் .. Reviewed by Madawala News on June 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.