லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் 14 வருடங்கள் தடுப்புக்காவலில் இருந்த சகாதேவன் உயிரிழப்பு.


கடந்த 14 ஆண்டுகளாக தடுப்புக்காவலில் இருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் நேற்று கொழும்பு
தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தார். அவரது உடல் இரண்டு நாட்களாக சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பொரளை, வனாத்துவில்லு சிறிசரஉயன வீட்டுத் தொகுதியை சேர்ந்த முத்தையா சகாதேவன் (62) என்பவரே உயிரிழந்தார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் 2005ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் இரண்டு வாரங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.

இன்று மரணவிசாரணைகள் நடந்தது. நாளை காலை பொரளை பொலிசில் முன்னிலையாகி சடலத்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

அத்துடன், ஜூலை 5ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி, மரணவிசாரணையில் சாட்சியமளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் 14 வருடங்கள் தடுப்புக்காவலில் இருந்த சகாதேவன் உயிரிழப்பு. லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் 14 வருடங்கள் தடுப்புக்காவலில் இருந்த சகாதேவன் உயிரிழப்பு. Reviewed by Madawala News on June 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.