"முஸ்லீம் அல்லாதவர்கள் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் போது, முஸ்லீம்கள் அரேபிய கலாசாரத்தை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை."




இன்று இலங்கையில் வாழும் அத்துனை இனங்களும் தமக்குரிய சுதேசிய மத கலாசார பாரம்பரியமான
விடயங்களை இழந்துள்ளன. மாறாக பெரும்பாலான முஸ்லீம் அல்லாதவர்கள் மேற்கத்திய கலாசாரத்தையும், அதிகமான முஸ்லீம்கள் அரேபிய கலாசாரத்தை ஒத்த ஆடைகளையும் சில காலாசார விடயங்களையும் பின்பற்றுவதை நான் கூறித்தான் தெரியவேண்டும் என்றில்லை.

என்றாலும், சிலரால் முஸ்லீம்கள் மாத்திரம் பின்பற்றும் அரேபிய கலாசாரத்தை ஒத்த முஸ்லீம்களின் ஆடை கலாசார விடயங்களை  கேள்விக்குற்படுத்துவது சமூக நீதி கிடையாது. உண்மையில் குறிப்பிட்டுக்காட்டிய மத கலாசார விடயங்களின் தெரிவானது ஒழுக்க விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டே தெரிவுசெய்யப்படுகின்றன.

இலங்கையில் உள்ள அதிகமான முஸ்லீம்கள் அதிலும் குறிப்பாக முஸ்லீம் பெண்களின் ஆடைக்கலாசார விடயங்களே இன்று இனவாதிகளால் குறிவைக்கப்படுகின்றது என்பது எந்தவிதமான அடிப்படையான காரணங்களும் இல்லாமல். இதில் நாம் கவனிக்கத் தவறிய பக்கம் எதுவென்றால் இலங்கையில் தாக்கம் செலுத்தியுள்ள மேற்கத்திய கலாசாரத்திலுள்ள பல பாதகமான காரணிகளை காரணமாகக் கொண்டு அரேபிய கலாசாரத்தை ஒத்த ஒழுக்க விழுமியங்களை கொண்ட சில விடயங்களை இலங்கையிலுள்ள முஸ்லீம்கள் தேர்ந்தெடுத்து பின்பற்றுகின்றார்கள் அவ்வளவுதான்.

மத கலாசாரங்களை கண்ணியமாக போதித்த பெளத்த, இந்து சுதேசிய கலாசாரங்கள் மேற்கத்திய கலாசாரம் என்ற போர்வையில் தனக்கே உரிய கலாசாரத்தை இழந்து தவிக்கின்றது என்பதனை முஸ்லீம்களின் கலாசாரத்தை கேள்விக்குற்படுத்துகின்ற இனவாதிகள் புரிந்துகொள்ளவும் வேண்டும்.

இன்றைய இலங்கையில் அரங்கேற்றப்படும் முஸ்லீம் விரோத செயற்பாடுகளையும், சில விடயங்களையும் அவதானித்தால் இலங்கையிலுள்ள முஸ்லீம்கள் சாதாரண பெயர் தாங்கிய முஸ்லீம்களாக இருந்தால் போதும் என்பதாகவே அமைந்துள்ளது.

[MLM.சுஹைல்]
"முஸ்லீம் அல்லாதவர்கள் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் போது, முஸ்லீம்கள் அரேபிய கலாசாரத்தை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை." "முஸ்லீம் அல்லாதவர்கள் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் போது, முஸ்லீம்கள்  அரேபிய கலாசாரத்தை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை." Reviewed by Madawala News on May 27, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.