உயர்கல்வித்துறையின் பங்களிப்பில் சகோதரர் அப்துர ரஹ்மான் அவர்களின் Bcas ன் பணி இன்றியமையாத தாகும் என்பதனை ஞானசார தேரர் புரிந்து கொள்ள வேண்டும்."



"இலங்கையைப் பொறுத்தமட்டில் போட்டி நிறைந்த உயர்கல்வித்துறையின் பங்களிப்பில்
சகோதரர் அப்துர ரஹ்மான் அவர்களின் Bcas ன் பணி இன்றியமையாத தாகும் என்பதனை ஞானசார தேரர் புரிந்து கொள்ள வேண்டும்."

உயர்தர பரீட்சையில் சித்தி பெறுகின்ற மாணவர்களில் பல்கலைக்கழக அனுமதியினை  குறைவானவர்களே அரச பல்கலைக்கழகங்களில்  வாய்ப்புக்களை பெறுகின்றனர். ஏனையவர்களுக்கு  உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. 

இதற்கான தீர்வாக தனியார் உயர் கல்வித்துறையில் வெளிநாட்டு பட்டப்படிப்புக்களை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் இன்று ஏராளமாக எமது நாட்டில் காணப்படுகின்றன இதில் bcas உம் ஒன்றாகும்.

சுமார் 20 வருடங்களாக  பயணித்துக் கொண்டிருக்கின்ற bcas கல்வி நிறுவனமானது ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை பல்வேறு துறைகளில் வெளியாக்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் இன்றுவரையில் வேலையில்லாப் பட்டதாரிகள் என்ற நாமத்திற்கே இங்கு இடமிருந்ததில்லை என்பது போல இலங்கையின் உயர்கல்வித்துறையில் bcas பல பங்களிப்புச் செய்துவருவது மாத்திரமல்லாமல் எமது நாட்டின் வெளிநாட்டு அன்னியச் செலாவணியிலும் பாரிய பங்களிப்பையும் வழங்கி வருகிறது.

எமது நாட்டில் உள்ள முஸ்லீம் மாணவா்கள் மாத்திரமல்லாமல் அனைத்து இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு கல்விகற்று அவர்களுக்கான துறையை தெரிவு செய்து கற்று நவீன வேலையுலகிற்காக அவர்களைத் தயாரித்து அவர்களுக்காவும், இந்த நாட்டுக்காகவும் வெளிநாடுகளில் பணிபுரிந்து பல்வேறுபட்ட வழிகளில் பங்களிப்புக்களைச் செய்தும் வருகின்றனர்.

இவ்வாறான ஒரு பயனுள்ள பணியை சகோதரர் அப்துர ரஹ்மான் அவர்கள் அவருடைய தனிப்பட்ட தொழில் முயற்சியாக கொண்டு வெற்றிகரமாக செய்துவருவதனை பெருமிதத்துடன் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் நாம் பாராட்டுவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் கடமைப்பட்டுள்ளோம். மாறாக தீவிரவாதம், அடிப்படைவாதம் போன்ற பொய்க் குற்றச்சாட்டுகளை திணிப்புச் செய்து கொச்சைப்படுத்துவது சமூக ஆரோக்கியம் கிடையாது.

[MLM.சுஹைல்]
உயர்கல்வித்துறையின் பங்களிப்பில் சகோதரர் அப்துர ரஹ்மான் அவர்களின் Bcas ன் பணி இன்றியமையாத தாகும் என்பதனை ஞானசார தேரர் புரிந்து கொள்ள வேண்டும்." உயர்கல்வித்துறையின் பங்களிப்பில் சகோதரர் அப்துர ரஹ்மான் அவர்களின் Bcas ன் பணி இன்றியமையாத தாகும் என்பதனை ஞானசார தேரர் புரிந்து கொள்ள வேண்டும்." Reviewed by Madawala News on May 29, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.