"இன நல்லிணக்கம் பிற மத கலாசாரங்களை பிரதிபலிக்கின்ற கொடியினாலோ, அல்லது தோரணங்களாலோ ஏற்படமாட்டாது மாறாக உணர்வு பூர்வமாக வெளிப்பட வேண்டும்."




ஏனென்றால் புத்த பெருமானின் வாழ்க்கையையும் அதனுடன் இணைந்த புத்த தர்மத்தையும் ஓரளவு
கற்றுள்ளோம் இஸ்லாம் என்ற மார்க்கம் இல்லை என்றால் நான் ஒரு பெளத்தனாக இருந்திருக்க வேண்டும் என ஆசைப்பட்டிருப்பேன். அந்தளவிற்கு புத்த மதம் வழிகாட்டியுள்ளது.

இந்த நாட்டில் பெளத்தர்களுக்கும் முஸ்லீம்களுக்குமான உறவு ஏனைய இனங்களின் உறவுகளையும் பார்க்கிலும் அதிகம்.ஒரு சோபித்த தேரர் இறந்ததிற்காக கண்ணீர் விட்டவர்கள் நாங்கள். அதேவேளை அவரிடம் இன நல்லுறவு பாடத்தை கற்றவர்களும் நாங்கள்தான்.அதனால் தான் ஒரு ஞானசாரவின் வெறித்தனமான கருத்துக்களைக் கொண்டு இன்றும் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம்.

வெறுமனே இன்றய முஸ்லீம் அரசியல் வாதிகளை வைத்து இந்த  நாட்டின் முஸ்லீம்களை ஏளனம் செய்யாதீர்கள். ஏனென்றால் இன்று இலங்கையில் அரசியல் செய்பவர்கள் முஸ்லீம் அரசியல்வாதிகளே தவிர முஸ்லீம் அரசியல் தலைவர்கள் கிடையாது.

அண்மைய சில நாட்களாக பெளத்தர்களின் பண்டிகையான வெஸாக் தினத்தை முன்னிட்டு முஸ்லீம்களால்  முஸ்லீம் பிரதேசங்களில் பெளத்த மத கலாசார கொடிகள் பறக்க விடப்பட்டும், வெஸாக் கூடுகள் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக தொங்கவிடப்பட்டும் காட்சியளிக்கின்றன என்றால் மிகையாகாது. அதேபோல் சிங்கள சகோதரர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதிகளில், முஸ்லீம் பிரதேசங்களில் அலங்கரிக்கப்பட்ட வெஸாக் அலங்காரங்களின் அளவுக்கு ஏற்ப அலங்கரிக்கப்பட்டிருக்கிறதா என்றால் சந்தேகமே.

இலங்கையில் ஏற்படுத்தப்படுகின்ற திட்டமிட்ட இன ஒடுக்கு முறைகளுக்கு எமது நாட்டில் எத்தனை வெஸாக் தினங்கள் வந்தாலும் எமது அனுகு முறையிலும் அரசியல் ரீதியான மனோநிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படாத வரையில் நாம் கொடிகளையும், கூடுகளையும் அலங்கரிப்போமே தவிர இன நல்லுறவை ஏற்படுத்த முடியாது.

எமது தேசியத்திற்கான பங்களிப்பை முஸ்லீம்களாகிய நாம் தேசப்பற்று என்ற உன்னதமான உணர்வுடன் இன,மத பேதங்களை மறந்து ஒவ்வொரு இனத்துக்கும் உரிய தனித்துவமான மத கலாசார பாரம்பரிய விடயங்களை அனுசரித்து நடைமுறைப்படுத்த முயல வேண்டுமே தவிர பிற மத கலாசாரங்களை நல்லிணக்கம் என்ற போர்வையில் போலியாக திணிப்பதற்கு எவ்வித அவசியத் தேவையும்மில்லை.

இலங்கையில் இருக்கின்ற அரசியல் கலாசாரத்திற்கு #இனவாதம்  மிகவும் அடிப்படைத் தேவையாக இருக்கும் போது மத நல்லிணக்கம் என்பது கேள்விக்குறியான விடயமாகும்.???????????

எப்போது  குற்ற உணர்வுகள்  இல்லாமல் பொளத்தர்களும், இந்துக்களும், முஸ்லீம்களும், கிறிஸ்த்தவர்களும் தங்களது  தனித்துவமான மத கலாசார விடயங்களை தாமாக முன்வந்து ஏனையவர்களின் தலையீடுகளை எதிர்பார்க்காமல் செய்வதற்கு முன்வருவார்களோ அப்போது இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டது என நாம் கருதலாம்.

[MLM.சுஹைல்]
"இன நல்லிணக்கம் பிற மத கலாசாரங்களை பிரதிபலிக்கின்ற கொடியினாலோ, அல்லது தோரணங்களாலோ ஏற்படமாட்டாது மாறாக உணர்வு பூர்வமாக வெளிப்பட வேண்டும்." "இன நல்லிணக்கம்  பிற மத கலாசாரங்களை பிரதிபலிக்கின்ற  கொடியினாலோ, அல்லது தோரணங்களாலோ ஏற்படமாட்டாது மாறாக உணர்வு பூர்வமாக வெளிப்பட வேண்டும்." Reviewed by Madawala News on May 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.