ஹெட்டிபொல# 5 ஜும்மா பள்ளிவாயல்கள் மற்றும் சில தக்கியாக்கள் மீதும் தாக்குதல் !!



ஹெட்டிபொல மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 5 ஜும்மா பள்ளிவாயல்கள் மற்றும் சில
தக்கியாக்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹெட்டிபொல பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்  மௌலவி ஸப்வான் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.

மடிகே அனுக்கல , நிக்கபிடி ,ஹெட்டிபொல ஜும்மாபள்ளிவாயல்கள் மீதும் கொட்டாம் பிட்டி பிரதேசத்தில் இரண்டு பள்ளிவாயல்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் அப்பகுதியில் உள்ள சில தக்கியாக்கள் தாக்கப்பட்டதாக கூறிய அவர் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதால் அவற்றின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என கூறினார்.

மேலும் பள்ளிவாயலை அண்மித்த வீடுகள் மற்றும் சில முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் மோட்டார் சைக்கிள் , ஆட்டோ , லொறிகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக கூறினார் .

தான் இருக்கும் ஹெட்டிபொல நகரை அண்மித்த பகுதிக்கு ஆளணி பற்றாக்குறை காரணமாக நிக்கவரட்டிய பொலிஸ் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஹெட்டிபொல# 5 ஜும்மா பள்ளிவாயல்கள் மற்றும் சில தக்கியாக்கள் மீதும் தாக்குதல் !! ஹெட்டிபொல# 5 ஜும்மா பள்ளிவாயல்கள் மற்றும் சில தக்கியாக்கள் மீதும் தாக்குதல் !! Reviewed by Madawala News on May 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.