மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு தொடர்புபட்ட அனைவரையும் சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வழங்கவும்.


(எம்.ஜே.எம்.சஜீத்)
2019.04.21 ஆம் திகதி நமது நாட்டில் அமைந்துள்ள 3 தேவாலயங்களிலும், 3 ஹோட்டல்களிலும்
மற்றும் தெஹிவலை தெமட்டகொட பிரதேசங்களிலும் மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் இக்கொடூர செயற்பாட்டிற்கு பின்னணியிலிருந்து செயற்பட்டவர்களையும் சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வழங்குவதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்த அவசர கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நமது நாடு 3 தசாப்த காலமாக கொடூர யுத்த சூழ் நிலையில் இருந்து விடுதலை பெற்று படிப்படியாக அமைதியை நோக்கி நகர்ந்து வரும் இக்கால கட்டத்தில் இக்கொடூர குண்டு தாக்குதலினால் நமது நாட்டில் அமைதி இழந்து அச்சத்துடன் வாழும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளதுடன், இனங்களுக்கிடையில் சந்தேகம் தோன்றும் நிலமை ஏற்பட்டுள்ளதுடன் நமது நாட்டுக்கான தேசிய பாதுகாப்புக்கும் பாரிய சவால் ஏற்பட்டுள்ளது.

இக்கொடூர குண்டுத்தாக்குதல் கிறிஸ்தவர்களின் புனித தேவாலயங்களில் இடம் பெற்றுள்ளதால் சில விஷமிகள் வதந்திகளை உருவாக்கி சமூக மோதல்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதேவேளை நமது நாட்டில் அமைந்துள்ள பிரதான ஹோட்டல்களை நோக்கிய குண்டுத் தாக்குதல்கள் ஊடாக நமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி பாரிய வீழ்ச்சி ஏற்படக் கூடிய நிலைமை தோன்றியுள்ளதுடன் வெளிநாட்டு செலாவணியை நாம் இழக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. குறித்து நாம் கவலை அடைய வேண்டி உள்ளது.

எனவே, இக்கொடூர தாக்குதல் தொடர்பாக உண்மையான விடயங்கள் கண்டறியப்பட்டு அதற்கான உயர் தண்டனைகள் வழங்கப்படுவதுடன் இச்சம்பவம் தொடர்பான விடயங்கள் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடந்த ஒரு வருடத்திற்கு முன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த அம்பாறை, திகன, காலி போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களுக்கும், முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்களுக்கும், முஸ்லிம் மக்களின் உடமைகளுக்கும் பாரிய சேதங்களை ஏற்படுத்தி நமது நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த  முஸ்லிம் சமூகத்தின் மீது பாரிய தாக்குதல்கள் திட்டமிட்ட முறையில் நடைபெற்றுள்ளது.

இத்தாக்குதலில் இருந்து படிப்படியாக மீண்டு வந்த வேளையிலும், இத்தாக்குதலுக்கு பின்னால் இருந்து செயற்பட்ட அரசியல்வாதிகள் இன்னும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படாத நிலையில் நாட்டின் ஜனாதிபதியான தங்களையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர். கோத்தபாய ராஜபக்ச அவர்களையும் கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இக்கொலை குற்றச்சாட்டுக்கான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத நிலையில் மேற்படி சம்பவங்களுக்கு பின்னால் பெரும் சக்திகள் இயங்கி வருவதாக நமது நாட்டு மக்கள் சந்தேகிக்கும் நிலைமை தோன்றியுள்ளது.

நமது நாட்டில் என்றுமில்லாதவாறு போதைப்பொருள் கடத்தல்கள் பாவனைகளால் நமது நாடு, நமது இளம் சமூகம் சீரழிந்ததனை உணர்ந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக தாங்கள் மேற்கொண்ட அவசர ஏற்பாடுகள் போன்று இவ்வண்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தனது அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு தொடர்புபட்ட அனைவரையும் சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வழங்கவும். மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு தொடர்புபட்ட அனைவரையும் சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வழங்கவும். Reviewed by Madawala News on April 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.