கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 22 ம் திகதி ஆரம்பம்: பதில் பாடசாலைக்கான திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
இரண்டாம் தவணைக்காக நாளை (17) புதன்கிழமை ஆரம்பமாகவிருந்த கிழக்கு மாகாண
முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 22 ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு இம்மாதம் 11 ம் திகதி முதலாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டது. அத்தோடு இரண்டாம் தவணைக்கான பாடசாலை ஆரம்பம் (17) புதன்கிழமை என அறிவிக்கப்பட்டிருந்தது.


எனவே 17, 18 ம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு அதற்கான பதில் பாடசாலை இம்மாதம் 27 ம் திகதி சனிக்கிழமையும் மேமாதம் 4 ம் திகதி சனிக்கிழமையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கிழக்கிலுள்ள தேசிய பாடசாலைகள் நாளை (17) ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 22 ம் திகதி ஆரம்பம்: பதில் பாடசாலைக்கான திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 22 ம் திகதி ஆரம்பம்: பதில் பாடசாலைக்கான திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. Reviewed by Madawala News on April 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.