நீங்கள் வாக்களிக்காவிட்டாலும் எங்கள் சேவைகள் தொடரும்.


(அஸ்ரப்  ஏ சமத்)
மினுவான்கொடை  கல்லொலுவ அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்
  3 மாடிகளைக் கொண்ட வகுப்பறைக் கட்டிடம் திறப்பு வைபவம் 18ஆம் திகதி கல்லுாாி அதிபா்  எம்.ரீ.எம். அசிம் தலைமையில் நடைபெற்றது.


இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல்மாகாண முதலமைச்சா் இசுரு தேவப்பிரிய, பாராளுமன்ற உறுப்பிணா்  பிரசன்ன ரணதுங்க, மேல் மாகண சபை உறுப்பிணா் என்.எஸ்.என். சகாவுல்லா மற்றும் கல்வி அதிகாரிகள் பிரதேச சபை உறுப்பிணா்களும் பெற்றாா்கள் ஆசிரியா்களும்  கலந்து சிறப்பித்தனா்.


இக் கட்டிடம் முன்னாள் முதலமைச்சா் பிரசன்ன ரணதுங்க அவா்களினால்  அடிக்கல் நாட்டப்பட்டு கட்டடிடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. அத்துடன் மிகுதியாக தேவைப்பட்ட நிதியினை தற்போதைய முதலமைச்சா் இசுரு தேவப்பிரியவினால் ஒதுக்கப்பட்டு  இக் கட்டிடம் 1 கோடி  26 இலட்சம் ருபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சா் இசுரு  தேவப்பிரிய இங்கு உரையாற்றுகையில் -

 கடந்த 3 மாதங்களாக எனது சகல அபிவிருத்திகளிலும் தமிழ் ,முஸ்லீம் பாடசாலைகளுக்கும் சமமான நிதி ஒதுக்கி கொழும்பு கம்பகா மவாட்டங்களில் பல கட்டிடங்களை திறந்தும், புதிய கட்டிடங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளேன். 

ஆனால் நீங்கள் வேறு கட்சிக்குத்தான்  வாக்களிப்பீா்கள்.உங்கள் வாக்குகளால் வந்தவா்கள்    ஏதாவது ஒரு   பாடசாலையில் ஒரு  கட்டிடத்தையாவது நிர்மாணித்துள்ளாா்களா ? எனக் கேட்க விரும்புகின்றேன். 

கடந்த வாரம் வத்தளை  சாஹிரா ,கொழும்பில் உள்ள சேர் ராசீக் பரீட், அல் இக்பால் ,ரத்மலானை `இந்துக் கல்லுாாி, மத்துகம தமிழ் வித்தியாலயம் போன்ற மேல் மாகாணத்தில் உள்ள   தமிழ், முஸ்லிம்  மாணவா்கள் கல்வி கற்கும் சகல பாடாசலைகளுக்கு தன்னால் முடியுமான நிதியினை ஒதுக்கி அவா்களது  கல்வி மேம்பாட்டுக்காக உயரிய சேவைகளை செய்து வருவதை அந்த பாடாசலைகளுக்குச்  நான்  செல்லும்போது அங்கு வரும் பெற்றோா்கள்  பாரிய உபசரிப்பு மற்றும் அவா்களது சந்தோசங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனா்  .



இப் பிரதேசத்தின் அபிவிருத்திகள் ஏதும் கிடைக்குமென்றால் அது  எமது ஜனாதிபதியின்  கீழ் தான் தங்களுக்கு கிடைத்துள்ளது.  தற்பொழுது   தமிழ் முஸ்லிம் மாணவர்கள் திறமையாக கற்கின்றனா். ஒவ்வொரு பாடசாலையிலும் குறைந்தது 10  பேருக்கும்  மேற்பட்டோா்கள்  பல்கழைக்கழகம் சென்றுள்ளதை பாடசாலை முன்னேற்றச் சான்றிதழ்கள் தெரிவிக்கின்றனா். .

அந்தந்த பிரதேசத்தில் உள்ள பட்டாதாரிகள் ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.  இப் பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் எதிா்காலத்தில் தீா்த்து வைப்பதற்கு தன்னாலான  சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன் எனவும் அவா் உறுதியளிததாா்.

இங்கு உரையாற்றிய பிரசன்ன ரணதுங்க-

இந்தப் பாடசாலை மட்டுமல்ல ஏனைய அபிவிருத்திகள் , பாதைகள் மற்றும் பள்ளிவாசல்கள் அபிவிருத்திகளுக்காக  கல்லொலுவ பிரதேச சபை  முன்னாள் உறுப்பிணா் எனது கட்சியின் ஊடாக பல அபிவிருத்தித் திட்டங்்களை முன்னெடுத்தோம்.

கடந்த உள்ளுராட்சித் தேர்தலின்போது மினுவான்கொடை பிரதேச தோ்தலின்போது  அவர் போட்டியிட்டாா் அவருக்கு 5 வாக்கு வித்தியசித்தினாலேயே  தோல்வி அடைந்தாா். நீங்கள் வாக்களித்திருந்தால் இவ் ஊருக்கு பல்வேறு அபிவிருத்திகளை அவர் முதலமைச்சரையும் என்னையும ்அனுகி செய்து கொடுத்திருப்பாா்  இருப்பினும் அவா்  கைவிடவில்லை தொடா்ந்தும் பல சேவைகளை எங்களை அனுகி  இந்த ஊருக்கு செய்து வருகின்றாா்.


 நீங்கள் வாக்களித்தவா்கள்  இந்தப் பிரதேசத்திற்கு என்ன செய்துள்ளாா்கள் ? எனக் கேட்க விரும்புகின்றேன்.  இறுதியில் இந்த ஊருக்கு என இருந்த  முஸ்லிம் பிரதேச  சபை உறுப்பிணா்களை இல்லாமல் செய்துவிட்டுப் போகியுள்ளாா்.


ஆகவே நீங்கள்  சிந்தித்து தமது  சேவை செய்யக் கூடியவா்களை ஆதரியுங்கள். இந்த அரசாங்கம் கல்விக்காக 2 வீதத்தினையே ஒதக்கியுள்ளது. கடந்த மகிந்த ராஜபக்ச காலத்தில் வேண்டிய நிதியினைப் பெற்று மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்தோம்.  என பாராளுமன்ற உறுப்பிணா் பிரசன்ன ரணதுங்க வேண்டிக் கொண்டாா்.
நீங்கள் வாக்களிக்காவிட்டாலும் எங்கள் சேவைகள் தொடரும். நீங்கள்   வாக்களிக்காவிட்டாலும் எங்கள் சேவைகள் தொடரும். Reviewed by Madawala News on March 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.