விகாரைக்குள்ளே மாணவர்களின் 'குடி' வில்லங்கம் !


என்ன வாப்பா இந்த நாட்டுல நடக்குது…..எமது அரசயிலமைப்பு சொல்லுவது போல இலங்கையின் சட்டங்கள் உண்மையாகிலுமே
எல்லோரக்கும் பொதுவானதுதானா என்று……………அதிலும் குறிப்பாக குற்றவியல் சட்டங்கள் யாவருக்கும் பொதவானது என்கின்ற ஏற்பாடுகள் எல்லாம் வெறும் பொய்யும் மாயையும் மட்டும்தானோ என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டேயிருக்கின்றது.


நேற்றைய  (2019-02-19) லங்காதீப பத்திரிகையின் செய்திப்படி கடந்த பதினாறாம் திகதி ஹட்டன் நகர்ப் பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற விகாரையொன்றில் நடைபெறுகின்ற தனியார் வகுப்புக்கு வந்திருந்த சாதாரண தரம் படிக்கின்ற மூன்று மாணவர்கள் வகுப்புக்கு வருகின்ற வழியிலே உள்ள சாராய பாரொன்றில் வாங்கிய பட்ட சரக்கு போத்தலை எடுத்துக் கொண்டு தனியார் வகுப்ப நடைபெறுகின்ற விகாரைக்கு வகுப்பு ஆரம்பிக்க முன்னரேயே சென்று செமையாக தண்ணியடித்து மொத்த வெறியில் தள்ளாடிக் கொண்டிருந்திருக்கின்றார்கள். 


வகுப்பு ஆரம்பித்து நடைபெறுகின்ற போது இடையிலே கொஞ்ச நேரத்தின் பின்னர் மூவரும் அடித்த சரக்கு இரைப்பைக்கு ஜீரணிக்க பிடிக்காமல் குமட்டி அப்புறம் வாந்தியோகம் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள். மூன்று மாணவர்கள் மீதும் சந்தேகம் கொண்ட விகாரஸ்தானாதிபதி பொலிசுக்கு இது தொடர்பில் அறிவிக்க பொலிசார் மூன்று மாணவர்களையும் டிக்கோயா பொது வைத்தியசாலைசாலைக்கு கொண்டு சென்று அவர்கள் தண்ணியடித்த மேட்டரை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.



மாணவர்களை கைது செய்கின்ற நேரம் அவர்களுடைய பைகளுக்குள்ளே சற்று மீதமிருந்த சாராயத்தோடு தள’ளாடாதிருந்த வெற்று போத்தல்களோடு ப்ளாஸ்டிக் கப்புககளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. சாதாரண தரம் படிக்கின்ற அந்த சிங்கள் மாணவர்கள் சின்னப்பசங்க விகாரைக்குள்ளே தெரியாமல் தண்ணியடித்து விட்டார்கள் பாவமென்று பொலிசாரும் எதிர்வரும் இருபத்து மூன்றாம் திகதி ஹட்டன் பொலிஸில் ஆஜராகுமாறு மாணவர்களை செல்லமாக்க் கண்டித்து அவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


சட்டத்தை மதிக்கின்ற நல்ல பொலிஸ்…அணைவருக்கும் பொதுவானதும் சம்மானதுமான நல்ல சட்டம்………மாணவர்கள் அறியாமல் செய்த குற்றத்தால் விகாரையின் புனிதம் கெட்டு விடாது என்று நல்லபடி யோசிக்கின்ற மனிதாபிமானமுள்ள விகாரஸ்தானாபதி.


புனித விகாரைக்குள்ளே பாரிலிருந்து வாங்கி வந்த சாராய போத்தல்களை பயமேயில்லாமல் திறந்து பட்டவர்த்தனமாக தண்ணியடித்து புனித விகாரையையே நாஸ்தி பண்ணயிருக்கின்றார்கள். அந்த விகாரையின் புனிதத்தின் மீத ஆஸிட் அடித்திருக்கின்றார்கள். அதெல்லாம் ஒரு குற்றமே கிடையாது. சும்மா தெரியாமல் தண்ணியடித்து விட்டார்கள். சின்னப் பசங்கள்….அவர்களை அவர்களது வயது கருதி மன்னித்து விட்டு விடுங்கள் என்ற தோரணையில் விகாரையும் பொலிசும் என்னம்மா நடந்திருக்கின்றார்கள்.


ஆனால் ஒரு முஸ்லிம் பையன் தெரியாமல் ஆர்வக் கோளாறில் எங்கேனும் சற்று உயரமான இடத்தில் ஏறி நின்று ஃபோட்டோ எடுத்தால் அது கொலையை விட பெருங் குற்றம்..........அவர்கள் கை பட்டால் குற்றம்…….கால் பட்டால் குற்றம்….சுண்ட விரல் தெரியாமல் பட்டாலும் குற்றம்……எது பட்டாலும் அது கடுந்தண்டணைக்கு உள்ளாகின்ற கொடுங் குற்றங்கள்…….அட்டென்ஷன் ப்ளீஸ்.



இந்த சிங்கள பசங்களின் இடத்தில் ஒரு முஸ்லிம் பையனாக இருந்திருந்தால் இந்நேரம் நாடு அதகளப்பட்டிருக்கும். விகாரஸ்தானபதிகள் ஏங்ரி மோடில் “திட்டமிட்டு விகாரைகளின் புனிதத் தன்மையை முஸ்லிம்கள் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்…..இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” என்று எகிறிக் குதித்திருப்பார்கள்.



“கொஞ்சம் கூட பயமில்லாமல் பட்டப்பகலில் சாராய போத்தல்களை கையோடு எடுத்து வந்து இந்த மாதிரி பகிரங்கமாக தண்ணியடித்து விகாரையின் புனிதத்தை கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய பசங்களுக்கு உச்சபட்ச தண்டனை விதிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்தவர்களுக்கு அது பாடமாக அமையும்” என்று சஜித் பிரேமதாச லெக்சர் அடித்திருப்பார்.



விகாரைக்குள்ளே தண்ணியடித்து அதன் புனித்த்தை நாசப்படுத்திய முஸ்லிம் மாணவர்கள் எதிர்வருகின்ற …………………….திகதி வரை விளக்க மறயிலில் வைக்குமாறு கௌரவ நீதவான் உத்தரவு” என்றெல்லாம் மீடியாக்கள் ஹை டெஸிபலில் அலறியிருக்கும்.



அது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் நமது அங்காளி பங்காளிகள் “ இவர்களைப் போன்றவர்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்” என்று பற்களை நற நறத்று அந்த மாணவர்கள் படிக்கின்ற பாடசாலையையோ அல்லது அரபுக்கலாசாலையையோ கண்ட மேனிக்கு கண்டம் பண்ணி முடித்திருப்பார்கள்.


விகாரைகளில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ளுவது என்று இன்னொரு உலமா குரூப் கையேடுகள் தயாரித்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை அமளி தமளிகளுக்கு மத்தியில் மெல்லத் தொலைந்து கொண்டிருக்கும் விளக்க மறியலில் இருந்து கொண்டிருக்கின்ற அந்த மாணவர்களின் எதிர்காலம்.

மீண்டும கேட்கின்றேன் இந்த நாட்டி;ல் என்னதான் நடந்து காண்டிருக்கின்றது

கிண்ணியா சபருள்ளாஹ்
2019-02-20

விகாரைக்குள்ளே மாணவர்களின் 'குடி' வில்லங்கம் ! விகாரைக்குள்ளே மாணவர்களின் 'குடி' வில்லங்கம் ! Reviewed by Madawala News on February 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.