ஒரு தசாப்தத்துக்குப் பிறகு ஒளியூட்டப்படும் பறகஹதெனிய கிராமம்.


- அப்துல் கரீம்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மாவத்தகம பிரதேச சபைத்தேர்தலில் போட்டியிட்டு
1268 விருப்பு வாக்குகளைப்பெற்று (32%) தெரிவாகிய முவாத் fபாரூக் அவர்கள் தமது தேர்தல் கால வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.

முதலங்கமாக தான் வாக்குறுதியளித்தவாறு தொழில் வாய்ப்பின்றி இருந்த இளைஞர்கள் 07 பேரை தனது சொந்த செலவில் (சுமார் 7 இலட்சம் செலவில்) வெளிநாடு அனுப்பியதுடன், மாவத்தகம பிரதேச சபைக்கு தெரிவாகியதை ஏனையவர்களைப் போன்று ஊர்வலம் சென்றும் வெடில் கொழுத்தியும் அநியாயமாக செலவுசெய்யாது, அப்பணத்தைக்கொண்டு இருளடைந்திருந்த கிராமத்தின் பிரதான வீதிகளுக்கு மின்விளக்குகளை தனது சொந்த செலவில் சுமார் 200,000/- ரூபா செலவில் மாவத்தகம பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன், எவ்வித கட்சி பேதங்களுமின்றி கண்டி குருனாகல் பிரதான வீதி, பறகஹதெனிய தபால் நிலையம், பள்ளிவாயல்கள், பெளத்த விகாரைகள் உட்பட முக்கிய சந்திகள் அனைத்துக்கும் மின் விளக்குகளைப் பொருத்தி முழு கிராமத்தையும் ஒளியூட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


மாவத்தகமை பிரதேச சபை ஊழியர்களின் கருத்துப்படி சுமார் ஒரு தசாப்த காலத்துக்குப்பிறகு பறகஹதெனிய கிராமத்தில் மின் விளக்குகள் பொறுத்தப்படுவதாக தெரிவித்திருந்தனர்.


இது பற்றி கருத்துத்தெரிவித்த மாவத்தகம பிரதேச சபை உறுப்பினர் முவாத் fபாரூக் தாம் அரசியலுக்கு வந்தது பறகஹதெனிய மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே, எனவே பாடசாலை, பள்ளிவாயல் என்பவற்றுக்கு அரசியல் தலையீடுகளின்றி வேண்டிய உதவிகளை செய்வதுடன்,  என்னை முன்னிறுத்தி எனக்கு வாக்களித்த பரகஹதெனிய மக்களுக்காக தம்மால் இயன்ற, தாம் வாக்குறுதியளித்த விடயங்களை காலக்கிரமத்தில் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும், மக்களின் தேவைகளை அறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றும் முவாத் fபாரூக் தெரிவித்தார்.
ஒரு தசாப்தத்துக்குப் பிறகு ஒளியூட்டப்படும் பறகஹதெனிய கிராமம். ஒரு தசாப்தத்துக்குப் பிறகு ஒளியூட்டப்படும் பறகஹதெனிய கிராமம். Reviewed by Madawala News on February 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.