ஞானசார தேரரை சந்தித்தது இரு அரசியல் நகர்வு ; மனோ



ஞானசார தேரரை தாங்கள் சந்தித்தது ஒரு அரசியல்
நகர்வு என அமைச்சர்
மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அவரது முகநூலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஞானசாரர் ஏன் சிறைக்கு போனார் என்பதும், அவர் யார் என்பதும் எனக்கு தெரியாதா, என்ன? 
நான் என்ன, நேற்று காலையில் மீண்டும் பிறந்தவனா? அல்லது எதையும் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என செய்ய முயலும் முதிர்ச்சியற்ற சிறுபிள்ளை அரசியலனா? அல்லது நாட்டையும், நாட்டுக்குள்ளே தமிழ் பேசும் மக்களையும் விலை பேசும் அரசியல் கபோதியா? 

ரவி கருணாநாயக்க, ஆசாத் ஆகியோருடன் சிறை வைத்தியசாலை சென்ற போது ஞானசாரரை சந்தித்ததன். உண்மை காரணம் எதிர்காலத்தில் தெரிய வரும். இது ஒரு அரசியல் நகர்வு. அவ்வளவுதான், இப்போ கூற முடியும். 

அவர் சொன்ன ஒரு விஷயத்தை செய்தி சுவாரசியம் கருதி நான் வெளியில் சொன்னேன். அதற்கு நான் அவரிடம் பதிலாக என்ன சொன்னேன் என்பதையும், அவருடன் நான் (நாம்) பேசியது என்ன என்பவற்றையும் நான் இங்கே சொல்ல முடியாது. 

ஆனால், எதையும் முழுக்க முழுக்க இரகசியமாக செய்ய நான் முயலவில்லை. அப்படியானால், இதை முழுக்கவே இரகசியமாக செய்திருக்கலாம். ஆகவே போனதை மறைக்கவில்லை. 

என்னுடன் வந்தவர்களை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். அதுபற்றி நான் ஒன்றும் கூற போவதில்லை. 

ஆனால், எனக்கு என்று ஒரு வரலாறு உண்டு. நான் எப்போதும் நேர்கோட்டில் பயணிக்கின்றவன். 

‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை' - உரிய அரசியல் சூழ்நிலை வரும்வரை - காத்திருப்பேனே தவிர, என்னை எவரும் வளைக்க முடியாது. 

நான் 'டீலர்' அல்ல. நான் ஒரு 'லீடர்'. ஆகவே இங்கே நண்பர்கள் என்னை நம்ப வேண்டும்!!
என அபர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரரை சந்தித்தது இரு அரசியல் நகர்வு ; மனோ ஞானசார தேரரை சந்தித்தது இரு அரசியல் நகர்வு ; மனோ Reviewed by Madawala News on February 23, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.