தடுப்பூசி எதிர்ப்பு பிரச்சாரங்களால் தென் தாய்லாந்தில் பரவிவரும் MEASLES (தட்டம்மை). இதுவரை 22 குழந்தைகள் மரணம்.


தடுப்பூசி சம்பந்தமாக அடிமட்ட மக்களிடையே பரப்பப்படும் பீதியினால் தடுப்பூசிகளால் தடுக்கக்கூடிய
நோய்கள் மீண்டும் பரவுவதோடு ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டும் 22 குழந்தைகள் மரணம் அடைந்துமுள்ளனர்.
தமிழாக்கம்:- Dr Ziyad aia

Suraiya தனது மகன் Atfan சாப்பிட முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்ட போது முதன்முறையாக நோய்க் குணங்குறிகளை அவதானித்தாள்.


அவளது மனதிலே Measles (தட்டம்மை) பற்றியும் அது தடுப்பூசிகளால் தடுக்கப்பட கூடியது என்றும் வானொலி தொலைக்காட்சிகளில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது ஞாபகத்துக்கு வந்தது.
இதேநேரம் தென் தாய்லாந்தின் Narathiwat பகுதிகளில் சுவரொட்டிகள் மூலம் அறிவுறுத்தல்கள் ஒட்டப்பட்டிருந்ததும் ஞாகத்துக்கு வந்தது.

"முதலில் நான் இதை Positive ஆக சிந்தித்தேன். இது Measles ஆக இருக்காது. இது வேறு ஏதாவதாக இருக்கலாம். ஏனெனில் Atfan னுக்கு முதலாவது தடுப்பூசி கொடுத்துவிட்டேன், அதனால் அவனுக்கு இது ஏட்பட வாய்ப்பில்லை." என்று சொன்னாள் 26 வயதான Suraiya.


ஆனால் அவள் குழந்தைகக்கு வந்து இருந்தது Measles. பிராந்திய வைத்தியர் Atfan க்கு வந்தது Measles தான் என்று உறுதிப்படுத்தினார். Measles க்கு எதிரான தடுப்பூசி குழந்தைகளுக்கு இருமுறை வழங்கப்படுகிறது. மிகவும் அரிதான நிலைமைகளில் முதலாவது ஊசி வழங்கப்பட்ட பின் நோய்த்தொற்றினால் நோய் வருவதற்கு சாத்தியம் உள்ளது அதுவே இக்குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது.

(குறிப்பு:- இலங்கையிலும் Measles தடுப்பூசியானது முக்கூட்டு Vaccine (MMR) என்ற அடிப்படையில் 9 மாதம் மற்றும் 3 வயது நிறைவடைந்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.)

Measles நோயானது தாய்லாந்தில் பெரும்பாலும் இல்லாதொழிக்கப்பட்ட நோயாக கருதப்பட்டாலும் தென் தாய்லாந்தில் இந்த Virus ஆனது கடந்த September முதல் விரைவாக பரவி உள்ளதோடு, நாட்டில் இத்தொற்றுக்கு பாதிக்கப்பட்ட 4000 பேரில் 3000 பேர் தென் தாய்லாந்திலேயே உள்ளனர். இதில் 22 குழந்தைகள் மரணித்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Suraiya தனது குழந்தை நோய்க்கு ஆளானதை அறிந்ததோடு இந்நோயானது மரணத்தை கொண்டுவரும் என தெரிந்ததும் மிகவும் பீதி அடைந்தாள்.

"நான் மிகவும் அச்சம் அடைந்தேன். என்னாலும் எனது கணவனாலும் இதனை நம்ப முடியவில்லை. நாங்கள் முதலாவது தடுப்பூசியை வழங்கியிருந்தோம். ஆகவே எங்களுக்கு இது எப்படி ஏற்பட்டது. இந்நோயின் மிகவும் ஆபத்தான நிலையை நாங்கள் அறிய வேண்டும் அதற்கு ஏற்றதுப்போல் நாங்கள் தயாராக வேண்டும்." என சுரையா தெரிவித்தாள்.

இந்நோயின் மிக ஆபத்தான கட்டம் நுரையீரலுக்கு தொற்று உண்டாகி மரணத்தை ஏற்படுத்தும். அதிர்ஷ்டவசமாக இக்குடும்பத்திற்கு அந் நிலை ஏற்படவில்லை. Afthan க்கு வழங்கப்பட்ட முதலாவது தடுப்பூசியின் மூலம் கிடைத்த நோயெதிர்ப்பு சக்தி இந்த பரவலை தடுத்தது. இதனால் அவன் நோயிலிருந்து மீள ஆரம்பித்தான்.

ஆனால் பலபேர் வைத்தியர்களின் ஆலோசனையை புறந்தள்ளி செயற்பட்டதால் தென் தாய்லாந்தில் இந்த Measles நோய் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தென் தாய்லாந்து பகுதியானது Malaysiya வின் எல்லையில் அமைந்துள்ளதோடு
Narathiwat, Pattani, Yala and Songkla ஆகிய மாகாணங்களை கொண்டுள்ளது. இங்கு தான் இராணுவத்துக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையில் அடிக்கடி கலவரங்கள் இடம்பெற்று வருகிறது. இப்பகுதி மிகவும் எழில் பொருந்திய பகுதியாக இருந்தாலும் யுத்தத்தினால் இப்பகுதியில் சுற்றுலாத் துறை மிக குறைவு.

நிபுணர்களின் கருத்துப்படி சமீபத்திய Measles பரம்பலானது
01. சுகாதார அறிவின்மை
02. அதிகரித்துவரும் குழந்தைகளின் போசாக்கின்மை
03. சமீப காலமாக அதிகரித்து வரும் தடுப்பூசி எதிர்ப்பு பிரச்சாரங்கள்
ஆகிய காரணங்களால் ஏற்படுகின்றது.

இப்போது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என
Muhammad fahmee Talek, (A local epidemiologist and lecturer at Prince of Songkla University Pattani campus) தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெரும்பாலானோர் 4 வயதுக்கு குறைந்தவர்கள்.

Talek மேலும் தெரிவிக்கையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 30% மானவர்கள் போஷாக்கின்மையாலும் ஏனையவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். (UNICEF)

இந்த நோய் பரம்பலை உன்னிப்பாக அவதானித்து வரும் Talek கூறுகையில் தடுப்பூசி ஏற்றல் குறைவடைந்ததற்கு 2 காரணங்கள் உள்ளன.
01. தடுப்பூசிகள் பற்றிய மத ரீதியான பிழையான நம்பிக்கை.
இது மதத்தலைவர்களின் பிழையான புரிதலும் தவறான வழிகாட்டலினாலும் ஏற்படுத்தப்படுகிறது.

02. தடுப்பூசிகள் யூத சதி (Zionist Conspiracy) அல்லது தடுப்பூசிகள் மேற்கத்திய கலாச்சாரம் எனவே அவை ஆபத்தானது என்ற எண்ணக்கரு.

தென் தாய்லாந்தில் பிரதான மதம் இஸ்லாம் அங்கு வாழும் பெரும்பாலான மக்கள் பழமைவாதிகள். இருப்பினும் பெருவாரியான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
சில அடிப்படைவாத மத தலைவர்கள் தடுப்பூசியில் உள்ள ஜெலட்டின் பன்றியிலிருந்து செய்யப்பட்டது என்று தவறான பிரச்சாரம் செய்கின்றனர். இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டது.

AL Jazeera தடுப்பூசிகளுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்யும் இரு மத தலைவர்களை தொடர்பு கொண்டபோது அவர்கள் பேச மறுத்து விட்டனர்.

இருப்பினும் ஏனைய மத தலைவர்கள் மற்றும் வைத்தியர்கள் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்த்தி தற்போது ஏற்பட்டுள்ள சடுதியான நோய் நிலைமையை மக்களுக்கு புரிய வைக்கின்றனர்.

Talek ன் கருத்துப்படி தடுப்பூசிகளுக்கு எதிரான மனநிலை 2010/11 ஆம் ஆண்டுகளில் கலவரம் நிலவிய பகுதிகளில் மக்கள் மத்தியில் பரவிய Diptheria எனும் நோயினால் 27 பேர் மரணித்ததை அடுத்து ஏற்பட்டது. கலவரம் நிலவிய பகுதிகளில் இராணுவம் தடுப்பூசிகள் மூலமாக மக்களை கொல்வதாக நம்பிக்கை ஒன்று பரப்பப்பட்டது.

மனித உரிமை கண்காணிப்புக் குழு கருத்து தெரிவிக்கையில் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வது சிறுவர்களின் உரிமை அதனை முன்னிலைப்படுத்த வேண்டும்.

Sunai Pasuk, Thailand researcher for HRW கருத்து தெரிவிக்கையில் சில மதபோதகர்கள் தடுப்பூசிகள் என்பவை இஸ்லாத்திற்கு முரணானவை என்ற கருத்தை பரப்புவதால் நிறைய பெற்றோர்கள் தடுப்பூசிகள் குழந்தைக்கு ஏற்றப்படுவதை தவிர்த்து வருகின்றனர்.

இருப்பினும் Talek ன் கருத்துப்படி சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகளால் பிரச்சினை ஓரளவு தீர்க்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் தெரிவிக்கையில் குழந்தைகளின் போசாக்கு மற்றும் பெற்றோருக்கான விழிப்புணர்வு, கல்வி அறிவூட்டல் என்பன தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி எண்ணிலடங்கா உயிர்களை காப்பாற்ற உதவும்.

தடுப்பூசிகள் மனித குலத்துக்கு இன்றியமையாதவை. ஆய்வுகளின்படி தடுப்பூசி களினால் 2000 முதல் 2017 இடைப்பட்ட காலப்பகுதியில் Measles 80% ஆல் குறைக்கப்பட்டுள்ளது. Measles தடுப்பூசி அண்ணளவாக 21.1 மில்லியன் உயிரிழப்புகளை தடுத்துள்ளது.

"நான் இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன் எனது மகன் ஆபத்தான காலப்பகுதியை தாண்டிவிட்டான். இப்போது அவன் சாதாரண நிலையை அடைந்து விட்டான்" என புன்னகையுடன் தெரிவித்தார் சுரையா.

Measles (தட்டம்மை) என்றால் என்ன? அது எவ்வளவு ஆபத்தானது?

Measles என்பது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக்கூடிய நோய். உலக சுகாதார நிறுவனத்தின் தகவல் படி (WHO) இந்நோயினால் 2017 ஆம் ஆண்டு 110,000 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்..

இந்நோயானது சாதாரண தடுமல் போல ஆரம்பித்து நெருப்பு காய்ச்சலோடு ஏனைய அறிகுறிகளையும் உண்டாக்கும். இது காற்றின் மூலம் பரவக்கூடியது. இது நுரையீரலை பாதித்தால் உடல் முழுவதும் இதன் தாக்கம் தென்படும். சில நாட்களில் முகம் கழுத்து பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்பட்டு அது உடல் முழுவதும் பரவலாம்.

WHO வின் கருத்துப்படி மரணங்கள் நோயின் கோரத்தினால் ஏற்படுகிறது.
இதனால் ஏட்படும் Encephalitis ( நோய் கிருமி மூளையை தாக்கி அது வீக்கமடைவதால் ஏற்படுவது), வயிற்றுளைவு, dehydration, காது தொற்று, நுரையீரல் தொற்று போன்றவற்றால் மரணம் ஏற்படுகிறது.

நன்றி:- Al-Jazeera News  https://aje.io/vlxcj 
தமிழாக்கம்:- Dr Ziyad aia


--
Dr. A.I.A.ZIYAD
MBBS (Peradeniya)
MSc - Biomedical Informatics (Colombo)
Medical Officer | Health Informatics
தடுப்பூசி எதிர்ப்பு பிரச்சாரங்களால் தென் தாய்லாந்தில் பரவிவரும் MEASLES (தட்டம்மை). இதுவரை 22 குழந்தைகள் மரணம். தடுப்பூசி எதிர்ப்பு பிரச்சாரங்களால் தென் தாய்லாந்தில் பரவிவரும் MEASLES (தட்டம்மை). இதுவரை 22 குழந்தைகள் மரணம். Reviewed by Madawala News on January 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.