புதிய அரசியலமைப்பு தொடர்பில் அச்சமடைய வேண்டாம் ; சுகாதார அமைச்சர் தெரிவிப்பு மக்களுக்கு வேண்டுகோள்



புதிய அரசியலமைப்பை கண்டு எவரும் அச்சமடைய தேவையில்லை என்று
சுகாதார போசணைகள் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 

அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் இங்கு வலியுறுத்தியதாவது,
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைககளின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே சட்டமூலம் உருவாக்கப்படும்.
குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு சர்வஜன வாக்கெடுப்புக்காக விடப்படும். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி துரிதகதியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு அல்ல. 2015ஆம் ஆண்டுமுதல் அந்தச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.அரசியலமைப்பு நிர்ணய சபை நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் இந்த விடயம் போசுப்பொருளாகவிட்டது.
புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிக்கு ஒருவர் உபவாசத்தை ஆரம்பித்துள்ளார். அது தேவையற்றதாகும் என்றார். 
புதிய அரசியலமைப்பு தொடர்பில் அச்சமடைய வேண்டாம் ; சுகாதார அமைச்சர் தெரிவிப்பு மக்களுக்கு வேண்டுகோள் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அச்சமடைய வேண்டாம் ; சுகாதார அமைச்சர் தெரிவிப்பு மக்களுக்கு வேண்டுகோள் Reviewed by Madawala News on January 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.