பெருநன்றிகள் ஆளுநரே!


கானுக்கு மூடி போடுதல், ‘கரன்ட்’ கட்டைக்கு லைட் போடுதல் போன்ற சில்லறை வேலைகளை அரைகுறையாக
செய்துவிட்டு அதை வரலாறு காணாத அபிவிருத்தியாக சித்தரித்து ஏமாற்றுப்பிழைப்பு அரசியல் நடாத்தி,

தம் அதிகார கதிரைகளை காப்பாற்ற நமது உரிமைகளும், அடையாளமும் இருந்தாலென்ன செத்தாலென்ன என்று கண்ணை மூடி கையுயர்த்தி அவ்வப்போது வரும் அரசாங்கங்களோடு நிபந்தனையின்றி சரணடையும், 

இத்தனை காலமாய் நாம் கொத்துக்கொத்தாய் வாக்குப்போட்டு தலைவர்கள் என்ற கிரீடம் அணிவித்து அழகு பார்த்தவர்கள் செய்ய துப்பில்லாத ஒரு பணியை,

சத்தமின்றி செய்து முடித்திருக்கிறார் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்!

சலூட்!!

நமது நிலம் எனும் தார்மீக உரிமையில் தாறுமாறாய் கபளீகரம் செய்து சிறுபான்மையினராக பிறந்த குற்றத்திற்காக அடிமை விலங்கை அணிவிக்க அவ்வப்போது எத்தனிக்கும் இனவாத அரசாங்கங்களின் நிலக் கொள்ளைக்கு ஒரு சாட்டையடி கொடுக்கப்பட்டுள்ளது. 

பெருநன்றிகள் ஆளுநரே!

உண்மையில் எமது இந்த உரிமைகளை வென்று தர வேண்டியர்கள் இத்தனை காலமாய் நமது வாக்கை மொத்தமாகவும் சில்லறையாகவும் காவெடுக்கும் இந்த ‘தேசிய தலைவர்கள்’ என்போர்.

ஆனால் அவர்கள் செய்ய ‘மறந்து’ விட்டார்கள்.
ஆளுநர் செய்து முடித்திருக்கிறார்.

இப்படி எத்தனையோ பணிகள் நம் சமூகத்திற்கு செய்ய வேண்டியிருக்கிறது.

அப்படியான பணிகளிலொன்றை செய்து விட்டு வர சொல்லுங்கள் அந்த ‘தலைவர்களை’!
அவர்களுக்கு செங்கம்பளம் விரித்து பட்டாபிஷேகம் செய்கிறோம்!

புதிய அரசியல் வரைபொன்று பற்றிய பேச்சுக்கள் எழுந்துள்ள ஒரு சூழலில்
‘முஸ்லிம்கள் வேண்டி நிற்பதென்ன?’ என்பதில் ஒருமித்த நிலைப்பாடொன்றுக்கு வர முடியாத இவர்கள் பின்பு கைசேதப்பட்டு கையறுந்த பின்னர் கண்ணீர் வடிக்க வரத்தேவையில்லை.

இத்தனைக்கும் இடையில் ஹிஸ்புல்லாஹ்வை ஆளுநராக நியமித்தது பிடிக்காத ஒரு ‘தலைவரும்’ நமக்குள்ளேதான் இருக்கிறார் என்பதும் வேறுகதை!

இந்த பதிவு ஹிஸ்புல்லாஹ்விற்கு விசிறி பிடிப்பதல்ல. 

யார் நல்லது செய்தாலும் அவர்களை வரவேற்கும் பக்குவ மேலிட்டால் எழுதியது என்றும் நீங்கள் 
கொள்ளலாம்!!

-சல்மான் லாபீர்
பெருநன்றிகள் ஆளுநரே! பெருநன்றிகள் ஆளுநரே! Reviewed by Madawala News on January 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.