22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்.


-பாறுக் ஷிஹான்  -
இளைஞன் ஒருவன்  அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம்
வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில்  பதிவாகியுள்ளது.

 நேற்றிரவு (13) ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில் நண்பர்களுடன் உரையடிக்கொண்டிருந்த வேளை தொலைபேசி ஒன்று வந்தாகவும் அதனை பேசியவாறு சிறுது தூரம் சென்ற குறிந்த இளைஞர் மீது இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர் .

இவ்வாறு உயிரிழந்தவர்  வாசுதேவன் அமல்கரன்(வயது-22) என்ற இளைஞர் ஆவார்.

 தாக்குதலில் சம்பவ இடத்தில் இளைஞர் உயிரிழந்ததுடன் தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

.இச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம். 22 வயது இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு... இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி ஓட்டம். Reviewed by Madawala News on January 14, 2019 Rating: 5